தங்கபாலு மீது சீமான் பாய்ச்சல்; விடுதலைப்புலிகளை தீவிரவாத இயக்கம் என்பதா?

ஒக்ரோபர் 23, 2008 at 9:15 முப 10 பின்னூட்டங்கள்

மாலைமலர்-
சென்னை, அக். 23-

இலங்கையில் தமிழர் படுகொலையை கண்டித்து ராமேஸ்வரத்தில் திரையுலகத்தினர் நடத்திய போராட்டத்தில் டைரக்டர்கள் சீமான், அமீர் ஆகியோர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கண்டனம் தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்து டைரக்டர் சீமான் மாலை மலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விடுதலைப்புலிகள் தீவிரவாத இயக்கமா என்று கருத்து கணிப்பு நடத்தப்பட்டு உள்ளது. 86 சதவீதம் மக்கள் தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? ஆட்சியையே மக்கள் தீர்மானிக்கிறார்கள். அரசியல்வாதிகளும் அதிகாரிகளுமா பயங்கரவாத இயக்கம் என்றும் தடை செய்யவேண்டும் என்றும் முடிவு செய்வது.

ஒரு இனத்தை அழித்து ஒழிக்கும் அரசு பயங்கரவாத அரசா மக்களை பாதுகாப்பவர்கள் தீவிரவாதிகளா?

பால்தாக்ரே விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல. தேவையில்லாமல் இந்தியாவில் தடை செய்துள்ளனர் என்றார். அவர் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவித்தார் என்று கண்டித்தது உண்டா? அவர் மேல் ஏன் கோபம் வரவில்லை. அவரைச் சீண்டினால் மராட்டியம் மண்மேடு ஆகிவிடும்.

தமிழர்கள் இளிச்சவாயர்கள். அதனால் வாயிலும் வயிற்றிலும் குத்துகிறீர்கள். மக்களே தீவிரவாத இயக்கம் இல்லை என்று சொன்ன பிறகு அதை மறுத்து கூற நீங்கள் யார்?

தமிழக மீனவர்கள் 400 பேரை நடுக்கடலில் சுட்டு வீழ்த்தி நாட்டையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது சிங்கள அரசு. அதை கண்டிக்க துப்புஇல்லை, வக்குஇல்லை. நானும் அமீரும் பேசியதில் நாடு சுக்கு நூறாகி விட்டதா? உடைந்து விட்டதா? சாதாரண இரண்டு பேர் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எப்படி ஊறு விளைவிக்க முடியும். சிதைக்கப்படும் அழிக்கப்படும் தமிழ் இனத்தை காப்பாற்றும் மனித நேயப்பண்பு இல்லாமல் கீழ்த்தரமான அரசியல் நடத்துகின்றனர்.

தமிழ் மக்கள் செத்து விழுகிறார்கள். அவர்களுக்காக கண்ணீர் சிந்துவது தப்பா? தமிழன் என்பதை விடுங்கள் மனிதன் செத்தால் வருந்த மாட்டீர்களா? தமிழ் மீனவன் கடலில் செத்து விழுகிறான். பேரியக்கம் என்பவர்கள் ஏன் கண்டிக்கவில்லை.

இங்கிருந்து ரேடார் வாங்கிக் கொண்டு ஆயுதங்கள் வாங்கிக் கொண்டு ராணுவ பயிற்சி எடுத்துக் கொண்டு தன் இனத்தை சேர்ந்த மீனவரை ஒருவன் சுட்டுத்தள்ளுகிறான். அவனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறீர்களே இதை விட கொடுமை என்ன இருக்கிறது. மீனவர்கள் சுடப்படுவது கண்டிக்கத்தக்கது என்று என்றாவது பேசியது உண்டா?

நாங்கள் உண்மையான மனிதநேயவாதிகள் ஒசாமா பின்லேடன் இரட்டை கோபுரத்தை இடித்ததற்காக அழுதோம். அதற்காக ஜார்ஜ் புஷ் பழிவாங்க இருநாடுகள் மீது படையெடுத்து அழிவு ஏற்படுத்தியதற்காகவும் அழுதோம். பெரியார், மார்க்சியா, அம்பேத்காரின் புதல்வர்கள் நாங்கள். சொந்த இனம் அழிவதை பார்த்து பேசாமல் மவுனமாக இருக்க முடியவில்லை. மவுனத்தை கலைத்து பேச வேண்டி இருக்கிறது.

எனவே தயவு செய்து தடையை நீக்குங்கள் என்று கெஞ்சுகிறோம். நாங்கள் எங்கள் எழவுக்கு அழுகிறோம். எங்கள் பிணத்தின் மேல் ஏறி நின்று பிரசாரம் செய்கிறீர்கள். நெல்சன் மண்டேலாவை கூட தீவிரவாத பட்டியலில் தான் வைத்துள்ளனர். சுபாஸ்சந்திரபோஸ் பெயரை அப்பட்டியலில் இருந்து இப்போது தான் நீக்கியுள்ளனர்.

உலகில் எந்த தீவிரவாத இயக்கத்திலும் 21 ஆயிரம் பேர் உயிர் நீத்த சம்பவம் நடக்கவில்லை. அவர்கள் தீவிரவாத இயக்கம் அல்ல. தாயக விடுதலைக்காக போராடும் போராளிகள். பொறுத்து இருந்து பார்ப்போம். எதுநடக்குமோ அது நன்றாகவே நடக்கும்.

Entry filed under: பேட்டி.

தொடர்வண்டி மறியல் அறப்போர் சீமான் எழிச்சி உரை காணொளி (ராமேஸ்வரம்)

10 பின்னூட்டங்கள் Add your own

 • 1. sundarmeenakshi  |  9:38 முப இல் ஒக்ரோபர் 23, 2008

  anna delhi poradam nadanum anna.
  sarai sari block pannanum appathan therium tamilarkal yar endru

  மறுமொழி
 • 2. tmmk  |  10:05 முப இல் ஒக்ரோபர் 23, 2008

  seeman is a very bold person we are like him.
  … அவர்கள் தீவிரவாத இயக்கம் அல்ல. தாயக விடுதலைக்காக போராடும் போராளிகள்.
  this is true……..

  மறுமொழி
 • 3. சிக்கிமுக்கி  |  12:23 பிப இல் ஒக்ரோபர் 23, 2008

  300க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களைக் கொன்ற தமிழ்இன அழிப்புச் சிங்களப் படைக்கு ஆய்தங்களும் பயிற்சியும் பிற உதவிகளும் செய்வது தவறு! உடனே நிறுத்துங்கள் என்று இந்தத் தங்கபாலுகள் என்றேனும் வாய்திறந்து பேசியதுண்டா?

  இந்திரா காந்தி அம்மையார் இலங்கையில் இனப்படுகொலை நடக்கிறது என்று அன்றே சொன்னார். இன்றையப் பேராயக்கட்சியில் யாருக்கும் அப்படி உண்மையைக் கூறக்கூட வாய்வருவதில்லையே!

  மறுமொழி
 • 4. Karuna, Sharjah  |  12:24 பிப இல் ஒக்ரோபர் 23, 2008

  I appreciate your talk as a Tamilan. Well done Mr.Seeman. Tamil people all are behind you.

  மறுமொழி
 • 5. யாரோ ஒரு தமிழன்.....  |  2:14 பிப இல் ஒக்ரோபர் 23, 2008

  இதை பேச தங்கபாலு-க்கு தகுதி கிடையாது.அவர் குடும்பம் இப்படி கஷ்டப்பட்டால் இப்படி பேசுவாரா?

  மறுமொழி
 • 6. sundarmeenakshi  |  4:57 பிப இல் ஒக்ரோபர் 23, 2008

  vaiko speech avilable in bbc webside.

  மறுமொழி
 • 7. திலீபன்  |  6:09 பிப இல் ஒக்ரோபர் 23, 2008

  மிக சரியாக கூறியுள்ளார் திரு.சீமான். ஆம் சில ஆண்டுகளுக்கு முன் திரு.பால் தாக்கரே விடுதலை புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று கூறினார். ன்ன கிழித்தார்கள் காங்கிரஸ் கபட வேடதாரிகள். அமெரிக்கா சனாதிபதி தேர்தலில் போட்டியிட முயன்று தோல்வியுற்ற அமெரிக்கா பெண்மணி திருமதி. ஹில்லாரி கிளிண்டன் அவர்கள் கூட விடுதலை புலிகள் தீவிரவாதிகள் அல்ல என்று கூறியுள்ளார் எனவே காங்கிரஸ் தலைவர்கள் அந்த அம்மையார் இந்தியா வந்தால் அனுமதி கொடுக்க மாட்டார்களோ. உங்கள் ஒட்டு அரசியல் போதும் தமிழக காங்கிரஸ்.

  மறுமொழி
 • 8. Thamizhan  |  6:15 பிப இல் ஒக்ரோபர் 23, 2008

  ஜியார்ஜ் வாசிங்டன் முதல் மா சே துங்,ஹோ சி மின்,பென் கொரியன்,நெல்சன் மாண்டேலோ அனை வரும் தீவிர வாதிகள் தான்.
  நாடு விடுதலை அடைந்த பின்னர் நாட்டின் தந்தைகள்,தலைவர்கள் ஆகிறார்கள்.
  விடுதலைப் புலிகள் தமிழர்களின் அங்கீகரிக்கப் பட்ட இயக்கம் என்பதைத் தமிழ்
  நாட்டுக் காங்கிரசு ஏற்றுக் கொண்டு உழைப்பதுதான் அவர்களுக்கு நல்லது.
  இல்லாவிட்டால் அவர்கள் கரைந்துதான் போக வேண்டும்.

  மறுமொழி
 • 9. vijay  |  10:21 பிப இல் ஒக்ரோபர் 23, 2008

  Wel said, We are agree withu Mr.Seeman

  மறுமொழி
 • 10. Pandyan  |  9:10 பிப இல் ஒக்ரோபர் 24, 2008

  Eelam will be a good confident partner for India. Manmohan Sing and Congress government is leading India to disaster by not checking the Chinese presense in Sri Lanka. Seeman – I appreciate your courage and truthness. Dont worry about Thangabalu – He and his party will dissapear soon.

  1) Remove the ban on LTTE
  2) Stop the War
  3) Bring Sri Lanka to negotiate the boundary with Eelam.
  4) Establish lasting peace in Lanka.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வீரவணக்கம் தியாகிகளே

பார்வைகள்

 • 52,898 பார்வைகள்

%d bloggers like this: