கொட்டும் மழையில் மனித சங்கிலி – 1

ஒக்ரோபர் 24, 2008 at 2:22 பிப 8 பின்னூட்டங்கள்

பலத்த மழையையும் பொருட்படுத்தாமல், இலங்கை இனப் படுகொலையைக் கண்டித்து சென்னையில் இன்று மாலை பிரமாண்ட மனித சங்கிலிப் போராட்டம் நடந்தது. முதல்வர் கருணாநிதி மனித சங்கிலிப் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிப்பதைக் கண்டித்து இன்று மாலை 3 மணியளவில் சென்னையில் பிரமாண்ட மனித சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து சென்னை நகரில் திமுகவினரும், பல்வேறு கூட்டணிக் கட்சிகள், தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குவிந்தனர்.

மனித சங்கிலிப் போராட்டம் தொடங்கவிருந்த நிலையில், வானம் இருண்டு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இருப்பினும் கன மழையைப் பொருட்படுத்தாமல் பல்லாயிரணக்கானோர் மனித சங்கிலிப் போராட்டத்திற்கு திரண்டு மழையையே அதிர வைத்தனர்.

இந்த நிலையில் மாலை 4 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் உள்ள சிங்காரவேலர் மாளிகை அருகே முதல்வர் கருணாநிதி பிரமாண்டமான மனித சங்கிலிப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து பல்லாயிரணக்கானோர் மனித சங்கிலிகளாக அணிவகுத்து நிற்கத் தொடங்கினர். ஒவ்வொரு பகுதியிலும் நிற்க வேண்டியவர்கள் பட்டியலை ஏற்கனவே திமுக தலைமைக் கழகம் அறிவித்திருந்தது. அதற்கேற்ப மனித சங்கிலியில் அனைவரும் பங்கேற்றனர்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மனித சங்கிலிப் போராட்டம் நடந்தது. கருணாநிதி கார் மூலம் மனித சங்கிலி நடைபெறும் இடங்களை சென்று பார்வையிட்டார்.

மாவட்ட கலெக்டர் அலுவலகம் முதல் அண்ணா சிலை வரை, வடசென்னையை சேர்ந்தவர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், வக்கீல்களுடன் அமைச்சர் ஆற்காடு வீராசாமி கலந்து கொண்டார்.

அண்ணா சிலை முதல் கிண்டி வரை, மாணவர்கள் மற்றும் பா.ம.க.வினர் கலந்து கொண்டனர்.

அவர்களுடன் அமைச்சர்கள் துரைமுருகன், க.பொன்முடி ஆகியோரும் பங்கேற்றனர்.

கிண்டி முதல் தாம்பரம் வரை, திரைப்பட துறையினர் மற்றும் தென் சென்னையை சேர்ந்தவர்களுடன் அமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மனித சங்கிலி அணிவகுப்புக்கு பல்வேறு கட்சிகளும், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் உள்பட பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதுடன் அணிவகுப்பிலும் கலந்து கொண்டன.

மேலும் சில புகைப்படங்கள்

http://files.periyar.org.in/viduthalai/Slideshow/chain/Ealathamilar_Manithasangili.htm

Entry filed under: நிகழ்வுகள்.

சீமான் எழிச்சி உரை காணொளி (ராமேஸ்வரம்) இயக்குனர் சீமான் கைது

8 பின்னூட்டங்கள் Add your own

 • 1. தூயா  |  2:48 பிப இல் ஒக்ரோபர் 24, 2008

  உறவுகளுக்கு நன்றிகள் பல…

  மறுமொழி
 • 2. Ooviya  |  3:16 பிப இல் ஒக்ரோபர் 24, 2008

  தமிழக உறவுகளுக்கு நன்றிகள்.

  மறுமொழி
 • 3. Thamizhan  |  4:18 பிப இல் ஒக்ரோபர் 24, 2008

  இந்தியாவும் காங்கிரசும் விழித்துக் கொள்ள வேண்டும்.காமராசரைப் புதைத்தவர்கள் காங்கிரசையும் புதைத்து விடப் போகிறார்கள்.
  சோனியா அம்மையாரிடம் உண்மையைச் சொல்லுங்கள்.
  தமிழகத்தில் காங்கிரசு அழியப் போகிறது,சரியாகப் புரிந்து கொண்டு
  நடக்க வேண்டுகிறோம்.

  மறுமொழி
 • 4. Tamilan  |  4:41 பிப இல் ஒக்ரோபர் 24, 2008

  மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. தமிழனை அழிக்க எவனும் உருவெடுக்க வில்லை

  மறுமொழி
 • 5. Shefan  |  11:42 முப இல் ஒக்ரோபர் 25, 2008

  நல்லது பண்றேங்க இந்தியன் தமிழர்களே ……. நன்றி பல கோடி.. கட்டி அணைக்க கைகளுக்கு அகலமிலை …. நிகழ கால புறநானுறு நீங்கள் …

  மறுமொழி
 • 6. திலீபன்  |  6:19 பிப இல் ஒக்ரோபர் 25, 2008

  என்னால் கலந்து கொள்ளமுடியவில்லையே என்ற வருந்த தோன்றும் அளவுக்கு இருந்தது தமிழ் நெஞ்சங்களின் அர்ப்பணிப்பு.

  மறுமொழி
 • 7. நல்லவன்  |  11:22 பிப இல் ஒக்ரோபர் 25, 2008

  மழையே நீயுமா!
  கொதிக்கும் அனலைப் போக்க நீ வருவாயென நான் நினைத்தேன். ஆனால் நீ கொட்டியே தீர்த்துவிட்டாயே.
  அல்லது தமிழனுக்காக நீயும் ஓவென்றழுதாயா?
  ஈழத்தமிழர் கண்ணீர் வெள்ளத்தில் முழுக எம் தமிழக உறவுகளை நீ உன் கண்ணிர் வெள்ளத்தில் முழுக வைத்தாயா?
  புலத்தில் என்னையும் என் அன்புத் தமிழகதின் எழுச்சியில்
  என் கண்ணீர் வெள்ளத்தில் மிதக்கவைத்தாயா?

  மறுமொழி
 • 8. Sooriya  |  6:05 பிப இல் ஒக்ரோபர் 26, 2008

  இலங்கையில் என் உறவுகள் சிந்தும் செந்நீரோடு
  இங்கு நாங்கள் சிந்தும் கண்ணீரை கலக்கத்தான் இந்த மழை!

  பாவேந்தர் சொன்னதுபோல,
  ‘எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
  இங்குள்ள தமிழர்கள் ஒன்றாய் இணைந்தார்.
  பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
  பூண்டோடு பொடியென்று சங்கே முழங்கு!’

  புரட்சி நிச்சயம் வெல்லும்,
  அதை நாளை மலரும் தமிழீழம் சொல்லும்..

  இப்போதாவது புரியட்டும் இலங்கை இனவெறி ராணுவதுக்கு, இந்த சங்கிலி நீண்டு போய் கொழும்புவை தொடும் நாள் தொலைவில் இல்லை…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வீரவணக்கம் தியாகிகளே

பார்வைகள்

 • 52,898 பார்வைகள்

%d bloggers like this: