Archive for திசெம்பர், 2008

ஜெயலலிதாவின் சூழ்ச்சி – சீமான் கைது – காங்கிரசின் மகிழ்ச்சி

seeman13

தொடர்ந்து தனது மோசமான அறிக்கைகளால், தமிழகத்தில் ‘ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு’ என்று இருந்த ஒரு முழமையான நிலையை மாற்றினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் – வைகோ, கண்ணப்பன், இயக்குநர்கள் சீமான், அமீர் போன்றவர்களை கைது செய்திருக்கிறது தமிழக அரசு.

பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள், ‘கைதானவர்களை விடுதலை செய்’ என்கிற நிலைக்கு மாறியிருக்கிறது. இது ஜெயலலிதாவின் தந்திரமான சாமார்த்தியத்திற்கு கிடைத்த வெற்றி. ஈழத்தமிழர்களுக்குக் கிடைத்திருக்கிற இன்னொரு மாபெரும் துயரம். (உணர்ச்சிவசப்பட்டு பேசியவர்களின் பேச்சும், ஒரு வகையில் ஜெயலலிதாவின் சதிக்கு சாதகமாக அமைந்து விட்டது)

ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்டு, தமிழக அரசு எடுத்த ‘சீமான்-அமீர் கைது நடவடிக்கை’, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக, இதுகாறும் தமிழக அரசு செய்த முயற்சிகளுக்கு பெரிய முட்டுக்கட்டையாக மாறியிருக்கிறது. ‘ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதுகூட பிரச்சினைக்குரியதோ’ என்கிற அச்சம் பொது மக்களிடம் உருவாகியிருக்கிறது.

தொடர்ந்து படிக்க

திசெம்பர் 30, 2008 at 9:16 முப 2 பின்னூட்டங்கள்

சீமானின் ஈரோட்டு எழிச்சி உரை – (தொகுப்பு-2)

சீமானின் ஈரோட்டு எழிச்சி உரை – பகுதி 6


சீமானின் ஈரோட்டு எழிச்சி உரை – பகுதி 7

சீமானின் ஈரோட்டு எழிச்சி உரை – பகுதி 8

சீமானின் ஈரோட்டு எழிச்சி உரை – பகுதி 9

சீமானின் ஈரோட்டு எழிச்சி உரை – பகுதி 10

*****

திசெம்பர் 29, 2008 at 12:32 முப 3 பின்னூட்டங்கள்

சீமானின் ஈரோட்டு எழிச்சி உரை – (தொகுப்பு-1)

சீமானின் ஈரோட்டு எழிச்சி உரை – பகுதி 1

சீமானின் ஈரோட்டு எழிச்சி உரை – பகுதி 2


சீமானின் ஈரோட்டு எழிச்சி உரை – பகுதி 3

சீமானின் ஈரோட்டு எழிச்சி உரை – பகுதி 4

சீமானின் ஈரோட்டு எழிச்சி உரை – பகுதி 5(1)

சீமானின் ஈரோட்டு எழிச்சி உரை – பகுதி 5(2)

திசெம்பர் 28, 2008 at 8:32 பிப 3 பின்னூட்டங்கள்

கோடி முறை சிறைக்கு செல்ல தயார் – சீமான்

seeman-jv2

உயிர் போகும் வரை போராடுவேன்!- சீமான்

நான் பேசுவதை நிறுத்த வேண்டுமென்றால் ஒன்று தமிழீழம் அடைந்திருக்க வேண்டும், இல்லையேல் நான் இறந்திருக்க வேண்டும் என்கிறார் இயக்குநர் சீமான்.

ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்தும், ராஜீவ் படுகொலையை விமர்சித்தும் பேசினார் என்ற காங்கிரசார் புகாரின் அடிப்படையில் அவர் கைதாகியுள்ளார்.

கைதாவதற்கு முன் இயக்குனர் சீமான் விகடன் குழுமத்துக்கு அளித்துள்ள பேட்டி:

”ராமேஸ்வரத்துல பேசினதுக்காக என்னைக் கைது செஞ்சாங்க. என்ன பேசினேன்னு இன்னும்கூட எவனுக்கும் தெரியல. இப்ப பேசினதுக்காக மறுபடி உள்ளே போட்டா, இன்னும் அதிகமாகத்தான் பேசுவேன். நான் என்ன பொம்பள கையைப் பிடிச்சு இழுத்தேனா? கோடி கோடியா மக்கள் பணத்தைக் கொள்ளையடிச்சேனா?.

தமிழ் இன விடுதலைக்காகப் போராடுறேன். அதுக்காக சிறையில போடுறாங்கன்னா, கோடி முறை சிறைக்கு செல்ல தயார். சாக பயந்தவன் தரித்திரம் ஆகிறான். சாகத் துணிஞ்சவன் சரித்திரம் ஆகிறான்.

அன்றைய கூட்டத்தில் நான் பேசினதைக் கேட்டு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பேர் கைதட்டினாங்களே… அவங்க மேல என்ன வழக்கு போடுவாங்க? சீமான் பேசுவதை நிறுத்தி விட்டான் என்றால் ஒண்ணு, தமிழ் ஈழம் அடைந்திருக்கவேண்டும்… இல்லை, இந்த சீமான் உயிர் போயிருக்கவேண்டும்.

மும்பை நகருக்குள்ள புகுந்த பயங்கரவாதிகளை அறுபது மணி நேரத்துல அழிச்சுட்டோம். இலங்கையில இருக்கிற விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள்னா அவங்களையும் அறுபது மணி நேரத்துல சிங்கள அரசால் அழிச்சிருக்க முடியும்தானே? இல்லை, ஆறு மாசத்துல அழிச்சிருக்கலாம்.

அட… ஆறு வருசத்துலயாவது அழிச்சிருக்கலாம். முப்பத்தாறு வருஷமா போராடிக்கிட்டு இருக்காங்களே. அப்ப அது தீவிரவாத இயக்கம் இல்லை. வலிமையான மக்கள் விடுதலைக்கான ராணுவம்னு உறுதியாகுதே!.

இத்தனை வருஷமா ஆயிரக்கணக்கில் ஈழத் தமிழர்களை படுகொலை செய்து கொண்டிருக்கிறார்களே… அமைதிப்படை என்ற பெயரில் இரண்டு லட்சம் பேரை அனுப்பினார்களே… அவர்கள் அப்பாவி தமிழர்களைத் தானே அழித்தார்கள். அது அமைதிப்படையில்லை, அநியாயப்படை! அவங்க செஞ்ச ஒரு நன்மையையாவது விரல் நீட்டிச் சொல்ல முடியுமா?.

உலகிலேயே பிரபாகரன் போன்ற இன்னொரு வீரன் இல்லை. அதனால்தான், இந்த வீரனை விட்டுவைத்தால் உலகத்திலேயே வலிமை மிக்க ராணுவத்தை ஏற்படுத்தி விடுவான் என்று பயப்படுகின்றனர். அண்டை தேசத்துல நம் சகோதரர்கள் படுறபாட்டைப் பத்தி பேசறதை தடுக்கற நாடு, என்ன ஜனநாயக நாடு?.

இலங்கையில எல்லா சித்ரவதைகளும் ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில்தான் நடைபெறுகிறது. புலிகள் வசமிருக்கும் பகுதிகளை மீட்டெடுத்து, அங்கிருக்கற மக்களை வாழவைக்கப் போவதா ராஜபக்ஷே சொல்லிக்கிட்டு இருக்கானே… எல்லாரையும் கொன்னுட்டு பிணங்களையாடா வாழவைக்கப் போற?”

”நீங்கள் விடுதலைப் புலி அமைப்பிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களை ஆதரித்துப் பேசுவதாக சுப்ரமணியன் சுவாமி போன்றோர் சொல்கிறார்களே?”

”அவர்கள் எப்படி ராஜபக்ஷேவிடம் பெட்டி பெட்டியாக பணம் வாங்கிக்கொண்டு விடுதலைப் புலிகளை எதிர்த்துப் பேசுகிறார்களோ… அதேபோல், நானும் விடுதலைப் புலிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களை ஆதரித்துப் பேசுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!. இந்த அவதூறெல்லாம் என்னை முடக்கிவிடாது!”

நன்றி : ஜீனியர் விகடன்

திசெம்பர் 21, 2008 at 8:16 முப 4 பின்னூட்டங்கள்

சீமான் மீண்டும் கைது

seemaann

தோழர் சீமான் வத்தலகுண்டுவில் கைது செய்யப்பட்டார். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

திசெம்பர் 19, 2008 at 7:51 முப 7 பின்னூட்டங்கள்

சீமான் கார் எரிப்பு

தமிழின உணர்வாளர் சீமானின் வளசரவாக்கம் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த அவரது கார் இன்று காலை அடையாளம் தெரியாத நபர்களால் எரிக்கப்பட்டிருக்கிறது.

******

திசெம்பர் 19, 2008 at 6:40 முப 2 பின்னூட்டங்கள்

I.T உண்ணாவிரதத்தில்-சீமான் பேச்சு

திருப்பி, திருப்பி பேசுவோம், சலிப்பே இல்லாமல், மடையர்களுக்கு புரிய வைப்போம்.

****************************************

தமிழர் படுகொலையை கேட்க நாதியில்லை.

****************************************

நான் சாகத்தயார், புலிகள்தான் மக்கள், மக்கள்தான் புலிகள்

****************************************

புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கமல்ல

****************************************

விடுதலைக்காக போராடும் எந்த ஒரு இயக்கத்தையும் இந்தியா ஆதரிக்கும் நேரு

****************************************

திசெம்பர் 18, 2008 at 7:17 முப 3 பின்னூட்டங்கள்


வீரவணக்கம் தியாகிகளே

பார்வைகள்

  • 53,118 பார்வைகள்

RSS திருமா