சீமான் மீண்டும் கைது

திசெம்பர் 19, 2008 at 7:51 முப 7 பின்னூட்டங்கள்

seemaann

தோழர் சீமான் வத்தலகுண்டுவில் கைது செய்யப்பட்டார். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

Entry filed under: நிகழ்வுகள்.

சீமான் கார் எரிப்பு கோடி முறை சிறைக்கு செல்ல தயார் – சீமான்

7 பின்னூட்டங்கள் Add your own

 • 1. J.Hari Krishnan  |  9:15 முப இல் திசெம்பர் 19, 2008

  migavum kandikkathakkadhu.

  மறுமொழி
 • 2. விழிவேந்தன்  |  2:55 பிப இல் திசெம்பர் 19, 2008

  மிகவும் கண்டிக்கத்தக்கது

  மறுமொழி
 • 3. sundarmeenakshi  |  1:21 பிப இல் திசெம்பர் 20, 2008

  migavum kandikkathakkadhu.valka seeman.oliga dinamalar

  மறுமொழி
 • 4. கலகம்  |  2:12 பிப இல் திசெம்பர் 20, 2008

  சீமான் – மணி கைது
  அரச பயங்கரவாதத்துக்கு தாளம் போடும் வீடணர்கள்

  பாசிச சட்டங்கள்.தடா,பொடா,வரிசையில்
  புதியதாய் NIA சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.ஏற்கனவே ராமேசுவரத்தில் பேசியதற்காக கைது செய்யப்பட்ட சீமான் மீண்டும் கைது இது எதை அறிவிக்கிறது எனில் யாராயிருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்பதனையா? தமிழகத்தையே பங்கு போட்ட செயாவின்மீதும்,அமெரிக்க உளவாளி சு.சாமியின் மீது பாயாத சட்டம் சீமான் மீது மீண்டும் பாய்ந்திருக்கின்றது…….

  கலகம்
  http://kalagam.wordpress.com/

  மறுமொழி
 • 5. sundarmeenakshi  |  9:06 பிப இல் திசெம்பர் 20, 2008

  see the partiality of dinamalar news.now it is created fight between congrass and viduthalai siruthaikal.so it biasing the main issue.it create fight between tamilans. thats what dinamalar wants?so if possible talk with leaders avoid this situation
  tamilwin.com
  கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முறிகண்டி- இரணைமடு பகுதியில் சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் நடத்தினர்.
  இத்தாக்குதல் சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் நடாத்தப்பட்டுள்ளதாகப் புலிகள் தெரிவித்துள்ளதுடன்,
  இத்தாக்குதலின்போது 40 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் உயிரிழந்த படையினரின் 10 சடலங்களை மீட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
  தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்பாராத அதிரடித் தாக்குதலினால் சிறிலங்கா படையினர் கடந்த சில வாரங்களாக பாரிய இழப்புக்களுடன் கைப்பற்றியிருந்த 2 கிலோ மீற்றர் நீளமான அரண் பகுதியை கைவிட்டு பின்வாங்கி ஓடினர்.
  முறிகண்டியில் உள்ள இரணைமடு பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 5:30 நிமிடமளவில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதல் இந்த முன்னரண் மீட்கப்பட்டுள்ளது.
  கடந்த செவ்வாய்க்கிழமை (16.12.08) சிறிலங்கா படையினரால் வல்வளைக்கப்பட்ட முன்னரணே விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டது.
  இந்த அதிரடித்தாக்குதலின் போது படையினருக்கு ஒத்துழைப்பாக வான்படையின் வானூர்திகள் செறிவான தாக்குதலை நடத்தின என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
  இவ்வாறு விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  dinamalar
  கொழும்பு: இலங்கையில், விடுதலைப்புலிகளின் ஆதரவு கப்பலை கடற்படையினர் அழித்ததில், 20 விடுதலைப்புலிகள் உயிரிழந்துள்ளனர் என ராணுவ அமைச்சரகம் நேற்று தெரிவித்தது. இதுகுறித்து இலங்கை ராணுவ அமைச்சரகம் கூறியதாவது: இலங்கையின், முல்லைத்தீவிற்கு வடகிழக்கு பகுதியில் 70 கடல் மைல் தொலைவில், விடுதலைப்புலிகளின் ஆதரவு கப்பல் ஒன்றை கடற்படையினர் நேற்று அழித்தனர்.
  இலங்கை கடற்படையைச் சேர்ந்த கடற்கரை ரோந்து கப்பல், கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, விடுதலைப்புலிகளின் கப் பலை கண்டுபிடித்தனர். உடனே கப்பற்படையினர், அந்த கப்பலை தடுத்து நிறுத்தி அதை அழித்து விட்டனர். அந்த கப்பலில் ஏராளமான போர்க்கருவிகள் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக முல்லைத்தீவில் இருந்து வந்த நான்கு படகுகளையும், ராணுவத்தினர் வழிமறித்து அழித்தனர். இந்த தாக்குதலில் 20 விடுதலைப்புலிகள் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு ராணுவ அமைச்சரகம் தெரிவித்தன

  மறுமொழி
 • 6. kalagam  |  5:13 முப இல் திசெம்பர் 21, 2008

  ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாய் பேசுவதே இப்பொழுது தேசவிரோதமாகிவிட்டது.அங்கே களத்தில் இருப்பது பாரதம் அது என்ன செய்தாலும் ஆதரிக்கவேண்டும்.எதிர்ப்பாய் பேசும் எல்லோருக்கும் காத்திருக்கின்றது பாசிச சட்டங்கள்.தடா,பொடா,வரிசையில்
  புதியதாய் NIA சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.ஏற்கனவே ராமேசுவரத்தில் பேசியதற்காக கைது செய்யப்பட்ட சீமான் மீண்டும் கைது இது எதை அறிவிக்கிறது எனில் யாராயிருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்பதனையா? தமிழகத்தையே பங்கு போட்ட செயாவின்மீதும்,அமெரிக்க உளவாளி சு.சாமியின் மீது பாயாத சட்டம் சீமான் மீது மீண்டும் பாய்ந்திருக்கின்றது

  http://kalagam.wordpress.com/

  மறுமொழி
 • 7. sundarmeenakshi  |  8:15 முப இல் திசெம்பர் 25, 2008

  இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் யார் என்ற புரிதல் குறித்து எனது எண்ணங்களை பதிவு செய்ய முற்படுகின்றேன். இயக்குனர் சீமான் கைது மற்றும் பலர் கைது என்று பல சம்பவங்கள் நடக்கின்றது. இதன் பின்னணி என்னவெனில் இவர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயற்பட்டார்கள் என்பதே. இந்த விடயத்தில் யார் இந்தியா என்னும் கூட்டாட்சிக்கு எதிரனவர்கள் என்பது குழப்பமாகவே உள்ளது.

  நான் புரிந்து கொண்ட இந்திய தேசியம் என்பது பல்வேறு இனங்கள் தமக்கே உரித்தான மொழி கலாச்சாரம் பிரதேசம் போன்ற சிறப்புடன் கூட்டாக வாழும் ஒரு இடமே இந்தியா. இங்கே இந்திய தேசியம் என்பது அந்தந்த இனங்களின் தனித்துவ அலகுகளை தாண்டி தனித்து எதுவும் இல்லை என்பதே எனது புரிதல். இந்தியாவில் வாழும் அனைத்த இனங்களினதும் தனித்துவ அலகுகளை சரிசமமாகவும் மதிப்புடனும் ஒருமைப்படுத்துவதே இந்திய தேசியமாக இருக்க முடியும். இந்த நிலை இலங்கை பேரினவாத அரசால் மீறப்பட்ட போதே ஈழத்தில் சிக்கல் ஏற்பட்டு இன்றுவரை சொல்லெண்ணா துயரத்தை அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம்.

  எளிய முறையில் சொல்வதானால் தாய்க்கு நல்ல மகனாய் இருத்தல் குடும்பத்துக்க நல்ல உறவாயிருத்தல், சமுகத்துக்கு நல்ல குணவானாய் இருத்தல், தன் இனப் பற்றுடன் இருத்துல் என்ற அடிப்படையிலே தான் நாட்டுக்கு நல்ல குடிமகனாக இருக்க முடியும். தமிழன் தமிழனா இருப்பதும், மலையாளி மலையாளியாய் இருப்பதும், பஞ்சாபி பஞ்சாபியாய் இருப்பதும், கன்னடர் கன்னடராக இருப்பதும், அவரவர் அவரவருக்குரிய தனித்துவத்துடன் இருப்பதும். ஒருவனை ஒருவன் எறி மிதித்து உதாசீனப்படுத்தாமல் இருக்கும் அந்த பண்பே இந்தியனாக தொடர்ந்து இருக்க விழிசெய்கின்றது. ஆனால் இந்திய இறையாண்மை பேசுகின்றவர்கள் நிலமை தூர நோக்கில் ஆபத்தாகவே உள்ளது.

  தமக்குரிய இனப்பற்றையும் உணர்வையும் தமக்கே உரித்தான சிறப்புகளையும் அம்சங்களையும் நிராகரித்து இந்தியனாய் இரு என்று உரைக்கப்படுகின்றது. இந்த நிலையே இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அடிப்படையில் எதிரானது. இதுவே இந்தியா நாளை சிதறிப்போக வழிகோலும். இந்தியர் என்ற உணர்வு உறுதியாக இருக்க வேண்டுமானால் ஒவ்வொரு இனங்களினதும் தனித்துவம் சம உரிமையுடன் பேணப்படுதல் அவசியமாகின்றது.

  இந்தியாவில் வாழும் அனைத்து இன மக்களினதும் மொழி பண்பாடு கலச்சாரம் வாழ்விடம் போன்ற தேசிய காரணிகள் பேணப்படுவதும், சம உரிமையுடனும் மதிப்புடனும் நடுவண் அரசால் அணுகப்படுவதும் அவசியமானது. இவற்றில் ஏற்றதாழ்வுகள் உருவாகும் போது கூட்டாட்சிக்கு பங்கம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். இது எனது ஈழத்து அனுபவத்தில் இருந்து உணர்வது.

  இப்போது உணர்ச்சி வசப்பட்டு பேசியவர்கள், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியவர்கள் என்ற குற்றச் சாட்டுக்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் உண்மையாக இந்திய இறையாண்மையை வலியுறுத்த பாடுபட்டுள்ளனர் என்பதே தூர நோக்கில் தெரியவரும்.

  நானுறூக்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை அரசு கொல்கின்றது. இந்த மீனவர்கள் தமிழர்களா இந்தியர்களா? ஏன் இப்படி ஒரு கேள்வி வருகின்றது? இந்தியர்கள் எனில் ஏன் இந்திய அரசு அவர்கள் கொலைக்கு நடவடிக்கை எடுக்கவில்லை? இதே ஒரு நிலமை வடமாநிலத்தில் உள்ளவர்களுக்கு நடந்திருந்தால் இந்திய நடுவண் அரசின் நிலை இதே போல் தான் இருந்திருக்குமா? இந்த மீனவர்கள் தமிழர்களா அல்லது இந்தியர்களா என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகின்றது. இந்த மீனவர்கள் தம்மை ஒரு இந்தியனாக காப்பாற்ற முடியாத போது தமிழனாக காப்பாற்ற முனைவது இயற்கையின் விதியாகும். ஈழத் தமிழர்கள் தங்களை ஒரு இலங்கையர் என்ற அடிப்படையில் காப்பாற்ற முடியவில்லையே !

  இந்த நிலை குறித்து கேள்வி கேட்டவர்களின் நோக்கம் என்ன? ஏன் காப்பாற்ற வில்லை? ஏன் இந்திய மீனவர்களை கொல்பவனுக்கு ஆயுதம் வழங்குகின்றாய்? ஏதற்காக? இவ்வாறு கேட்டால் நடுவண் அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதே எதிர்பார்ப்பு. அந்த நடவடிக்கையின் பிரகாரமே இந்த மீனவர்கள் தொடர்ந்தும் இந்தியர்கள் என்ற எண்ணப்பாட்டில் நம்பிக்கையுடன் இருப்பார்கள். ஆனால் கேள்வி கேட்பதே தப்பு, இந்தியாவுக்கு எதிரானது என்றல்லவா சொல்லப்படுகின்றது. இது தொடர்ந்து மீனவர்கள் கொல்லப்படட்டும், மத்தியரசு கண்மூடி இருக்கட்டும், தமிழகம் கொதிக்கட்டும் மாநில வாரியான பிரச்சனைகளும் பிரிவினைகளும் வரட்டும் என்றல்லவா தூர நோக்கில் உள்ளது.

  இதே போல் தான் ஈழத் தமிழர் பிரச்சனையும். இதில் என்ன வித்தியாசம் எனில் இனத்தால் ஒன்றாக இருந்தபோதும் இடையில் கடல் பிரிக்கின்றது. ஆனால் இன உணர்வு ஒன்று தானே? தனது இனத்தை கொல்வதற்கு துணைபோக வேண்டாம் என்று பேசுவதில் என்ன தவறு இருக்கப்போகின்றது? இதை மத்தியரசு செவி சாய்க்காத போது மத்தியரசு மீதான பற்றும் இந்தியன் என்ற உணர்விலும் கேள்வி எழுகின்றது. இதுவே யதார்த்தம். இன்று ஈழத்தமிழனுக்கு நாளை தமிழக தமிழனுக்கு என்று மக்கள் சிந்திப்பார்கள். இது தவிர்க்கப்பட வேண்டுமாயின் மத்தியரசு தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். இந்த உணர்வுகளை உதாசீனம் செய்யும் போது மக்கள் கோவப்படுகின்றார்கள், அதையே அடக்க முற்படுகின்றனர் தவிர பிரச்சனையை தீர்க்க முயலவில்லை. இது அடக்க கூடிய விசயம் இல்லை. ஒரு அணையில் எல்லையை தாண்டி நீர் நிரம்பினால் அணையை திறந்து நீர் மட்டத்தை குறைக்க வேண்டும் இல்லாவிடில் அணை உடைந்து பாரிய நாசத்தை ஏற்படுத்தும். இன உணர்வும் அவ்வாறானதே.

  ஈழத்து பிரச்சனை இந்திய மீனவர்களை இலங்கை அரசு கொல்லும் பிரச்சனை நதிநீர் பிரச்சனைகள் போன்ற குறிப்பிட்ட மாநிலத்தில் வாழும் இனத்தை பாதிக்கும் பிரச்சனைகளின் அடிப்படையில் மாநில மக்களின் உணர்வுகள் தமது இனம் குறித்தும் தனித்துவம் குறித்தும் கேள்விகனை உண்டாக்கும்.

  இதே ஈழப்பிரச்சனை ஆரம்பத்தில் கல்வியில் பிரச்சனை, தனிச் சிங்களச் சட்டம், பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றம் என்று ஆரம்பித்து இன்று அவலங்கள் எல்லை மீறிப் போய் நிற்கின்றது.

  ஈழத் தமிழனாக நாம் போரால் படும் அவஸ்த்தைகள் போதும். அன்று இலங்கை ஆழும் சிங்கள அரசு தமிழர்களையும் சம உரிமையுடன் நடத்தியிருந்தால் நாம் இன்று ஏன் இவ்வளவு கொடுமையை அனுபவிக்க வேண்டும்? ஏன் பிரிவினையை கோரியிருக்க வேண்டும். போராட்டமும் அதன் வலிகளும் எந்த இனத்துக்கும் வரக் கூடாது என்பதே போரும் அவல வாழ்வும் எமக்கு கற்றுத் தந்த கடைசிப்பாடம். இதை அனுபவித்தால் தான் புரியும். பிரிவினை என்ற நிலை இந்தியாவுக்குள் வரக் கூடாது. வருவதற்குரிய அடித்தளமும் இடப்படக் கூடாது. ஆனால் இடப்படுகின்றது. இது சீமானால் அல்லது மணியால் இடப்படுகின்றது என்பது தூர நோக்கில் உண்மை இல்லை. காங்கிரஸ் மற்றும் சில குறிப்பிட்ட தரப்பினரின் வரட்டுப்பிடிவாதத்தால் இடப்படுகின்றது. அதன் எதிர்ப்பு வடிவத்தையே அடக்க முற்படுகின்றனர். பிரச்சனைகளுக்குரிய அடிப்படை காரணிகளை சரிப்படுத்துவதை விடுத்து அது வளர்க்கப்படுகின்றது பின்னர் அதில் அரசியல் நடத்தப்படுகின்றது.

  எனது அனுபவ அறிவில் உலகில் விசேடமாக இந்தியாவில் பிரிவினைவாதம் போன்றன வரக்கூடாது என்பதே ஈழப்போர் உணர்த்தும் பாடம் என்று சொல்கின்றேன். இனங்கள் தங்களது இன உணர்வை பின்தள்ளி சாதீய உணர்வை முன்நிறுத்தி வர்க்க உணர்வை முன்நிறுத்தி வரலாறு தெரிந்த காலந்தொட்டு நகர்ந்து வருகின்றது. இதன் தாக்கம் ஈழத்தில் இனத்துக்கான போராட்டத்தில் பேயாட்டம் ஆடுகின்றது. எம்மில் இன்று சாதியம் வர்க்கம் கடந்த நிலையில் இன உணர்வு பெருகி இருக்கலாம் ஆனால் இந்த பிரச்சனைகள் வளர்த்துவிட்ட பிடிவாத மானுடத்துக்கு விரோதமான குணம் என்னும் என்னும் மறையவில்லை. நாம் ஒன்றுபட்ட நிலையில் முப்பது வருட போரட்டத்திற்கு பின்னும் பூரணத்துவம் அடையவில்லை. சாதீய பிரதேச வர்க்க வாரியாக பிரிந்தே கிடக்கின்றோம்.

  இனத்துக்கான போராட்டம் கொடுத்த நிர்பந்தம் இதில் உடைவை ஏற்படுத்துகின்றது ஒரு சாதகமான விடயம் ஆனால் அவ்வாறு உணர்ந்த இன உணர்வில் தமிழினம் என்ற காரணத்துக்காக இங்கே எந்த உயர்ந்த சாதியும் தாழ்ந்த சாதியும் அல்லது மதங்களை கலந்து திருமணம் செய்வதி்ல்லை. விதிவிலக்காக சிலது நடப்பதை புதிய இன உணர்வு மேலோங்கியதால் வந்த விழைவு என்று அர்த்தமில்லை. இயல்பான அந்த தன்மை அடுத்தடுத்து தலைமுறைகளில் சாத்தியப்படலாம்.

  எமக்குள் இன ஒற்றுமை இல்லாமல் போனதற்கு காரணம் எமக்குள் இருந்த பல்வேறு பிரச்சனைகள். இன்றும் ஆழுக்கொரு திசையில் ஒன்றுபட முடியாமல் போவதற்கு காரணமும் இந்த பிரச்சனைகள் வளர்த்துவிட்ட பிடிவாத குணம். அனுசரிக்க முடியாத குணம் என்று பலவிதமான ஆழுமைகள் ஆகும். இவ்வாறான எமது உள்ளக பிரச்சனைகளே சிங்கள பேரினவாத அரசுக்கு மிக மிக சாதகமான விடயமானது.

  எமது இனத்தின் இந்த சிக்கல் நிறைந்த பிரச்சனை இந்தியாவில் உள்ள அனைத்து இனத்திற்கும் பொருந்தும். பிரிவினை எண்ணங்கள் இன அடிப்படையில் எழுமானால் அந்த இனம் மிகப் பெரிய அவலத்தை சந்திக்கும். அதே நேரம் இன உணர்வு இல்லாமல் போனால் உள்ளக சிக்கல்களும் தீராது. குறித்த மாநிலத்தில் உள்ள மக்கள் ஒடுக்கப்படுவர். அதை தட்டிக்கேட்பதில் ஒற்றுமை இல்லாது எது பிழை எது சரி என்ற புரிதல் அற்று ஏராளமான பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

  இவ்வாறான சிலந்திவலைபோல் சிக்கலான முரண்பாடுகளை உடைய தேசங்கள் அந்த முரண்பாடுகளை களைவதை தலையாய கடமையாக கொண்டிருக்க வேண்டும். இந்த முரண்பாடுகள் குறிப்பிட்ட ஒரு தரப்பினருக்கு சாதகமாக அமைந்து விடுகின்றது. குறிப்பிட்ட ஒரு வர்க்கத்துக்கு சாதகமாக அமைந்து விடுகின்றது. எனவே அந்த தரப்பினர் முரண்பாடுகளை நிலுவையில் வைத்திருக்கவும் அதை பயன்படுத்தவுமே விரும்புகின்றனர். இன்றுவரை ஈழச் சிக்கல்கள் நதிநீர் பிரச்சனை குறித்த சிக்கல்கள் மீனவர்கள் குறித்த பிரச்சனை எதிலும் இந்தியர் என்ற உண்மையான ஆழுமை பிரயோகிக்கப்படவில்லை. சாதகங்களை அனுபவிக்கும் தரப்பினரின் ஆழுமைகளே முடிவுகளாக அமைகின்றது. இது ஒட்டுமொத்த தேசத்தையும் படிப்படியாக ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்கின்றது.

  ஒரு இனம் தாழ்ந்து போவதற்கும் அடிமைப்படுவதற்கும் அந்த இனம் இடமளிப்பதே முதலாவது நிலை. இந்த நிலையை பிரயோகித்தே என்னுமொரு இனம் தனது ஆக்கிரமிபப்பை அதிகாரத்தை குறிப்பிட்ட இனம் மீது செலுத்துகின்றது. இதுவே அன்று ஈழத்தில் எமது நிலை. இதுவே தமிழகத்தில் இன்று நாம் காணும் நிலை. அரசியல் மற்றும் மேலாண்மை ஆதிக்க தரப்புகளின் சுயநலன்களுக்காக ஒரு பெரும் துயரத்துக்கான இடமளிக்கப்படுகின்றது. இந்த இடமளிப்பானதின் விழைவுகளிலேதான் நதிநீர் பிரச்சனைகள் விவசாயிகள் தற்கொலைகள் மீனவர் படுகொலைகள் என்பன தொடர்கின்றது. நாளை என்னும் பல சலுகைகள் தடுக்கப்படலாம். என்னும் புதிய சிக்கல்கள் உருவாகலாம். பிரச்சனைகள் வளர வளர இன்றய ஒரு சீமான் அல்லது அமீர் நாளை நூறாக விரியும். இதுவே எனது தேசத்தில் நான் நேரில் உணர்ந்த வரலாறு.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வீரவணக்கம் தியாகிகளே

பார்வைகள்

 • 52,898 பார்வைகள்

%d bloggers like this: