கோடி முறை சிறைக்கு செல்ல தயார் – சீமான்

திசெம்பர் 21, 2008 at 8:16 முப 4 பின்னூட்டங்கள்

seeman-jv2

உயிர் போகும் வரை போராடுவேன்!- சீமான்

நான் பேசுவதை நிறுத்த வேண்டுமென்றால் ஒன்று தமிழீழம் அடைந்திருக்க வேண்டும், இல்லையேல் நான் இறந்திருக்க வேண்டும் என்கிறார் இயக்குநர் சீமான்.

ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்தும், ராஜீவ் படுகொலையை விமர்சித்தும் பேசினார் என்ற காங்கிரசார் புகாரின் அடிப்படையில் அவர் கைதாகியுள்ளார்.

கைதாவதற்கு முன் இயக்குனர் சீமான் விகடன் குழுமத்துக்கு அளித்துள்ள பேட்டி:

”ராமேஸ்வரத்துல பேசினதுக்காக என்னைக் கைது செஞ்சாங்க. என்ன பேசினேன்னு இன்னும்கூட எவனுக்கும் தெரியல. இப்ப பேசினதுக்காக மறுபடி உள்ளே போட்டா, இன்னும் அதிகமாகத்தான் பேசுவேன். நான் என்ன பொம்பள கையைப் பிடிச்சு இழுத்தேனா? கோடி கோடியா மக்கள் பணத்தைக் கொள்ளையடிச்சேனா?.

தமிழ் இன விடுதலைக்காகப் போராடுறேன். அதுக்காக சிறையில போடுறாங்கன்னா, கோடி முறை சிறைக்கு செல்ல தயார். சாக பயந்தவன் தரித்திரம் ஆகிறான். சாகத் துணிஞ்சவன் சரித்திரம் ஆகிறான்.

அன்றைய கூட்டத்தில் நான் பேசினதைக் கேட்டு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பேர் கைதட்டினாங்களே… அவங்க மேல என்ன வழக்கு போடுவாங்க? சீமான் பேசுவதை நிறுத்தி விட்டான் என்றால் ஒண்ணு, தமிழ் ஈழம் அடைந்திருக்கவேண்டும்… இல்லை, இந்த சீமான் உயிர் போயிருக்கவேண்டும்.

மும்பை நகருக்குள்ள புகுந்த பயங்கரவாதிகளை அறுபது மணி நேரத்துல அழிச்சுட்டோம். இலங்கையில இருக்கிற விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள்னா அவங்களையும் அறுபது மணி நேரத்துல சிங்கள அரசால் அழிச்சிருக்க முடியும்தானே? இல்லை, ஆறு மாசத்துல அழிச்சிருக்கலாம்.

அட… ஆறு வருசத்துலயாவது அழிச்சிருக்கலாம். முப்பத்தாறு வருஷமா போராடிக்கிட்டு இருக்காங்களே. அப்ப அது தீவிரவாத இயக்கம் இல்லை. வலிமையான மக்கள் விடுதலைக்கான ராணுவம்னு உறுதியாகுதே!.

இத்தனை வருஷமா ஆயிரக்கணக்கில் ஈழத் தமிழர்களை படுகொலை செய்து கொண்டிருக்கிறார்களே… அமைதிப்படை என்ற பெயரில் இரண்டு லட்சம் பேரை அனுப்பினார்களே… அவர்கள் அப்பாவி தமிழர்களைத் தானே அழித்தார்கள். அது அமைதிப்படையில்லை, அநியாயப்படை! அவங்க செஞ்ச ஒரு நன்மையையாவது விரல் நீட்டிச் சொல்ல முடியுமா?.

உலகிலேயே பிரபாகரன் போன்ற இன்னொரு வீரன் இல்லை. அதனால்தான், இந்த வீரனை விட்டுவைத்தால் உலகத்திலேயே வலிமை மிக்க ராணுவத்தை ஏற்படுத்தி விடுவான் என்று பயப்படுகின்றனர். அண்டை தேசத்துல நம் சகோதரர்கள் படுறபாட்டைப் பத்தி பேசறதை தடுக்கற நாடு, என்ன ஜனநாயக நாடு?.

இலங்கையில எல்லா சித்ரவதைகளும் ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில்தான் நடைபெறுகிறது. புலிகள் வசமிருக்கும் பகுதிகளை மீட்டெடுத்து, அங்கிருக்கற மக்களை வாழவைக்கப் போவதா ராஜபக்ஷே சொல்லிக்கிட்டு இருக்கானே… எல்லாரையும் கொன்னுட்டு பிணங்களையாடா வாழவைக்கப் போற?”

”நீங்கள் விடுதலைப் புலி அமைப்பிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களை ஆதரித்துப் பேசுவதாக சுப்ரமணியன் சுவாமி போன்றோர் சொல்கிறார்களே?”

”அவர்கள் எப்படி ராஜபக்ஷேவிடம் பெட்டி பெட்டியாக பணம் வாங்கிக்கொண்டு விடுதலைப் புலிகளை எதிர்த்துப் பேசுகிறார்களோ… அதேபோல், நானும் விடுதலைப் புலிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களை ஆதரித்துப் பேசுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!. இந்த அவதூறெல்லாம் என்னை முடக்கிவிடாது!”

நன்றி : ஜீனியர் விகடன்

Entry filed under: பேட்டி.

சீமான் மீண்டும் கைது சீமானின் ஈரோட்டு எழிச்சி உரை – (தொகுப்பு-1)

4 பின்னூட்டங்கள் Add your own

 • 1. ஹிப்ஸ் (G)  |  2:31 பிப இல் திசெம்பர் 21, 2008

  ஜீனியர் விகடன் செய்தியை அப்படியே தட்டச்சு செய்து பதிவேற்றி இருக்கலாமே! படிப்பதற்கு முடியவில்லை .

  மறுமொழி
 • 2. சுக்ரன்  |  2:21 பிப இல் திசெம்பர் 23, 2008

  பார்க்க சீமான் பற்றிய கட்டுரை.

  http://vinavu.wordpress.com/2008/12/22/eelam9/#comments

  மறுமொழி
 • 3. ரேகா  |  9:26 பிப இல் திசெம்பர் 24, 2008

  எம் மக்களுக்காகச் சிறை செல்லவும் துணிந்தவர்கள், எனும்போது அதற்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.

  தோழர் சீமானுக்கு இடப்படும் விலங்குகள் அவர் தலைக்கான கிரீடத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றன.

  புறநாணூற்றுத் தமிழர் வீரம் சொன்ன
  இருபதாம் நூற்றாண்டு தமிழனே சீமானே……….
  நிரூபித்து விட்டாய் நீயும் ஒரு வீரத் தமிழன் என்று……….
  உறங்கிக் கிடக்கும் தமிழினத்துக்கு
  தமிழீழ விடியல் தரும் சூரியன்
  எங்கள் தலைவன் பிரபாகரன் என
  கொக்கரித்து துயிலெழுப்ப வந்த சேவலடா நீ……
  ஈட்டியாகப் பாய்ந்தது உன் வார்த்தைகள் (காங்கிரஸ் கட்சிக்கு,இதனல் தாநோ உன் மிது இவளவு கோபம்)

  மறுமொழி
 • 4. thamizhini  |  10:11 முப இல் பிப்ரவரி 12, 2009

  tamil enathirkku kidaitha maaperum pokkisam seeman tamilanukkaga kuralkodukkum seemanukku eathakaya prachanaikalaiyum santhikka nangal thayaraka ullom enna vilai kodutthavadhu tamileelam adanthe theeruvom

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வீரவணக்கம் தியாகிகளே

பார்வைகள்

 • 52,898 பார்வைகள்

%d bloggers like this: