Archive for ஜனவரி, 2009

கோவை சிறையில் இருந்து பிணையில் விடுதலையான சீமான்

 

இயக்குநர் சீமான், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, பெ.மணியரசன் ஆகியோரை நிபந்தனையில்ல பிணையில் விடுதலை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து இன்று மாலை 7 மணியளவில் மூவரும் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு வெளியில் வந்தனர். 

seemaan1

seemaan2

அவர்களை வரவேற்க பெரியார் திராவிடர் கழகத்தினர் திரளாக கோவை கு.இராமகிருட்டிணன் மற்றும் தலைமைக்கழக உறுப்பினர் வெ.ஆறுச்சாமி தலைமையில் சிறை வாயிலில் கூடி இருந்தனர். தாரை தப்பட்டை முழங்க பட்டாசுகள் வெடிக்க மூவரும் ஊர்வலமாக மக்கள் திரளுடன் கோவை காந்திபுரத்திலுள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தனர். 

seemaan3

பின்னர் பெரியார் திராவிடர்கழகத்தின் அலுவலகமான பெரியார் படிப்பகத்தில் பொதுமக்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் சிறை அனுபவங்களையும் சென்னை உயர் நீதிமன்றமானது தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்து தங்களுக்கு நிபந்தனையற்ற பிணை வழங்கியமை பற்றியும் விளக்கிகூறினார்கள். 

seemaan4

வரவேற்பு ஏற்பாட்டினை தமிழ்நாடு மாணவர்கழக பொறுப்பாளர் ந.பன்னீர்செல்வம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். 

seemaan5

இந்நிகழ்வில் கட்சி வேறுபாடின்றி அனைத்து தமிழ் உணர்வாளர்களும் கலந்துகொண்டு மூவரையும் வரவேற்றனர்.

ஜனவரி 20, 2009 at 7:44 பிப 2 பின்னூட்டங்கள்

சீமான், கொளத்தூர் மணிக்கு பிணை

seeman1

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கைது செய்யப்பட்ட திரைப்பட இயக்குனர் சீமான், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி மற்றும் மணியரசன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர்காலனி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக திரைப்பட டைரக்டர் சீமான், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி, கூட்டம் ஏற்பாடு செய்த தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் மீது ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதைத்தொடர்ந்து தேனி மாவட்டம் தேவநாயக்கன்பட்டி பகுதியில் படப்பிடிப்பில் இருந்த டைரக்டர் சீமான், மேட்டூரில் வீட்டில் இருந்த கொளத்தூர் மணி, சென்னையில் இருந்த மணியரசன் ஆகியோரை போலீசார் கைது செய்தார்கள்.

கைது செய்யப்பட்ட டைரக்டர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் ஈரோடு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். 3 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு அசோகன் உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

இந்த நிலையில் டைரக்டர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் சார்பில் வக்கீல் பா.பா.மோகன் ஈரோடு மாஜிஸ்திரேட்டு 1 வது கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் டைரக்டர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோருக்கு ஜாமீன் கேட்டிருந்தார்.

சீமான் பேச்சுக்கு தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கண்டன ஊர்வலங்கள் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் சீமானுக்கு ஜாமீன் கிடைக்குமா என்று அவருடைய ஆதரவாலர்கள் வருத்தத்துடன் இருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில் ஜாமீன் கேட்டு மூவரும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் மூவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

ஜனவரி 19, 2009 at 11:43 முப 2 பின்னூட்டங்கள்

சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் பிணையில் விடுதலை

seeman

சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தால் இன்று (19.01.2009) பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். நாளை அவர்கள் கோவை சிறையிலிருந்து விடுவிக்கப்படலாம்.

வழுக்குறைஞர் துரைசாமி எடுத்த முன்முயற்சியில் நீதிபதி நிபந்தனை பிணை வழங்கினார்.

ஜனவரி 19, 2009 at 10:35 முப 5 பின்னூட்டங்கள்


வீரவணக்கம் தியாகிகளே

பார்வைகள்

  • 53,309 பார்வைகள்

RSS திருமா