சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் பிணையில் விடுதலை

ஜனவரி 19, 2009 at 10:35 முப 5 பின்னூட்டங்கள்

seeman

சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தால் இன்று (19.01.2009) பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். நாளை அவர்கள் கோவை சிறையிலிருந்து விடுவிக்கப்படலாம்.

வழுக்குறைஞர் துரைசாமி எடுத்த முன்முயற்சியில் நீதிபதி நிபந்தனை பிணை வழங்கினார்.

Entry filed under: ஈழ விடுதலை, நிகழ்வுகள்.

ஜெயலலிதாவின் சூழ்ச்சி – சீமான் கைது – காங்கிரசின் மகிழ்ச்சி சீமான், கொளத்தூர் மணிக்கு பிணை

5 பின்னூட்டங்கள் Add your own

 • 1. muthamil78  |  4:04 முப இல் மார்ச் 12, 2009

  உங்கள் உணர்ச்சிமிக்க போராட்டமும் அனல்கக்கும் பேச்சும் தொடரட்டும்

  நன்றி
  முத்தமிழ் வேந்தன்
  muthamil78@gmail.com

  மறுமொழி
 • 2. முத்தமிழ் வேந்தன்  |  1:32 முப இல் ஏப்ரல் 11, 2009

  பிரிந்து போகும் உரிமை ஓர் (தமிழ்) இனத்திற்க்கு உள்ளதா?
  சோவியத் யூனியனைக் (ருசியா)கட்டியமைத்த ஜோசப் ஸ்டாலின் இனப்பிரச்சனைக் பற்றி தான் எழுதியுள்ள “தேசிய இனப்பிரச்சனை குறித்து” என்ற புத்தகத்தில் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

  பிரிந்து போகும் உரிமை உள்ளிட்ட சுயநிர்ணய உரிமை ஓர் இனத்திற்கு உள்ளதா என்பது கீழ்க்காணும் காரணங்களால் தீர்மானிக்கப்படும் என்று வரையறுத்துக் கூறியுள்ளார்.

  1) ஒரு சிறுபான்மை இனம், பேரினவாதத்தால் அடக்குமுறைக்கு உள்ளாக்க்ப்பட்டிருக்கவேண்டும்.

  2) பிரிவினை கோரும் இனமக்கள் தொடர்ச்சியான நிலப்பரப்பில் இருக்கவேண்டும்.

  3) மொழி மட்டுமே ஓர் இனத்தின் முக்கிய அடையாளமாகும். ஜாதி, மதம் போன்றவற்றால் ஓர் இனத்தின் அடையாளப்படுத்த முடியாது.

  ஜோசப் ஸ்டாலின் வரையறுத்துள்ள இந்த மூன்று காரணிகளும் “ஈழ்த்தமிழர்களுக்கு முற்றிலும் பொருந்தக்கூடியவை”

  ஏனென்றால், இலங்கை விடுதலை பெற்ற நாளிலிருந்து இன்றுவரை சிங்கள பேரினவாதத்தின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு ஈழத்தமிழர்கள் ஆட்பட்டு வருகின்றனர்.

  வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் பூர்வீகத் தாயகம் என்பதாகும். ஆனால் கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களை வலுக்கட்டாயமாக குடியமர்த்தியதன் மூலம் இலங்கை அரசு அத்துமீறியது. அடக்குமுறையை கையாண்டுள்ளது. (பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இஸ்ரேல் இதைத்தான் செய்தது).

  இலங்கை ராணுவம், ராணுவத்தின் துணைப்படைகள், மத்திய காவல்துறை ஆகிய படைப்பிரிவுகளில் மருந்துக்கும்கூட ஒரு தமிழர் இல்லை.(ஹிட்லரின் நாஜிப்படையில் ஒரு யூதன்கூட இல்லை). இந்த அளவிற்கு அவநம்பிக்கையும், பிளவும் உறுதியாகக் கெட்டிப்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் எவ்வாறு கூடிவாழ முடியும்?

  தமிழ்ப் பெண்களைத் திட்டமிட்டு, கூட்டுப் பாலியல் அத்துமீறல்களுக்கு உட்படுத்துவது சிங்கள ராணுவத்திற்கு அன்றாட கடமையாக வலியுறுத்த்ப்பட்டுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள்கூட சிங்கள ராணுவத்தினரின் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பம் தரித்துள்ளார்கள் என்ற செய்தி இடியாய் இறங்குகிறது. “உங்கள் வயிற்றில் புலி அல்ல, சிங்கள சிங்கம்தான் வளரவேண்டும்” என்று சொல்லி சொல்லி தமிழ் பெண்களை கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதை ஒழுக்கமில்லாத, கோழைத்தனமான சிங்கள ராணுவம் ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளது.(கொடுங்கோலன் ஹிட்லர் படைகள்கூட இந்த ஈனச் செயலில் ஈடுபட்டதாக வரலாறு இல்லை).

  தமிழர்களின் அடையாளங்களையும், பண்பாட்டு சின்னங்களையும் சிதைப்பதை சிங்கள பேரினவாதம் திட்டமிட்டு நடத்தி வருகிறது.(யாழ்பாணத்தில் இருந்த மிகப்பெரிய நூலகத்தை எரித்து சாம்பலாக்கியது மற்றும் பாடசாலைகள் எரிக்கப்பட்டது). இதனால் ஒரு தலைமுறை தமிழ்க் குழந்தைகள் எழுத்தறிவற்றவர்களாக ஆக்கப்பட்டது.

  இலங்கையில் தமிழினத்தை முற்றிலுமாகத் துடைத்தெறியும் நோக்கத்தை ராச்பக்சே-வின் பாசிச இனவெறி அரசு தடையேதுமில்லாமல் அரங்கேற்றி வருகிறது. விடுதலைப் புலிகளை அழித்த பின்பு மீதமுள்ள தமிழர்களைப் பாதுகாப்பு முகாம்கள் என்ற பெயரில் திறந்தவெளி சிறைச்சாலைகளில் நிரந்தரமாய் அடைத்து வைக்க வெட்டவெளி மைதானங்களை தற்போது தாயர் நிலையில் வைத்துள்ளது ராசபக்சே-வின் கொலைவெறி பிடித்த சிங்கள அரசும், ஒழுக்கமில்லாத சிங்கள ராணுவமும்.

  உலக சரித்திரத்தில் எந்த இனமும் இந்த அளவு ஆதரவற்ற, பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டதில்லை.

  எத்தனை எத்தனை கொலைகள், கற்பழிப்புகள், சித்ரவதைகள், ஓலங்கள் மற்றும் அலங்கோலங்களைக் கொண்டது ஈழ மண். குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என்று ஒருவரையாவது விட்டதுண்டா?.

  மனிதன் மிருகங்களோடுகூட வாழ்ந்துவிடலாம். இவ்வளவு கொடுமைகள் நடந்துள்ள நிலையில் சிங்கள் அரக்கர்களோடு எப்படி ஒன்றாக வாழமுடியும்?…

  இவ்வளவு தூரத்திற்கு வந்த பின்பு, தனி ஈழம்தான் தீர்வு என்று அரசியல் தலைவர்களும், மக்களும் கூறிவருகின்றனர். (இலங்கைத் தமிழர்கள் பல தேர்தல்களிலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலும் இக்க்ருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்).

  எனவே இலங்கையில் இருந்து பிரிந்து போகும் உரிமை தமிழர்களுக்கு நூறு விழுக்காடு உண்டு. அரசியல் தீர்வு என்பது தற்காலிக தீர்வாக இருக்குமே தவிர நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்காது. தனி நாடு ஒன்றே தமிழர்களுக்கு முழுமையான சுதந்திரத்தையும், அமைதியையும் பெற்று தரும்.

  நன்றி

  முத்தமிழ் வேந்தன்
  muthamil78@gmail.com
  சென்னை

  மறுமொழி
 • 3. முத்தமிழ் வேந்தன்  |  1:35 முப இல் ஏப்ரல் 11, 2009

  “இலங்கை நாட்டின் இறையான்மைக்கு ஊறு நேராமல் ஒற்றை ஆட்சியின் கீழ் தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்று வாழவேண்டும்” என்கிறார்களே அது கனவிலும் நடக்கப்போவதில்லை.

  இனவெறி கொண்ட சிங்கள ஆட்சியாளர்களின் தொடர் அடக்குமுறைகளில் பல்லாயிரம் தமிழர்களின் உயிரையும், தமிழச்சிகளின் மானத்தையும் இழந்தும், உயிரோடு இருக்கும்போதே உடல் உறுப்புக்கள் வெட்டி எடுக்கப்பட்டும், குத்தி குதறப்பட்டும், உயிரோடு எறிக்கப்பட்ட கொடுரம் நிகழ்ந்த மண்..ஈழ மண்..

  மானம், ஈனம், சூடு, சொரணை ஆடு, மாடுகளைப்போல் சிங்களர்களிடம் “மண்டியிட்டு வாழ்வதைவிட புலிகளுக்கு பக்கபலமாக நின்று, போராளிகளோடு மடிவதே மேல்” என்ற நிலையில்தான் ஈழமக்கள் இருக்கிறார்கள்.

  எரிந்த சாம்பலிலும் உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவைதான் “புலிகள்”.

  பதுங்கும் “புலி” பாய்ந்தே தீரும்.

  அதை காலம் சொல்லும். தமீழிழ நாடு உருவாகியே தீரும்.

  நன்றி

  முத்தமிழ் வேந்தன்
  muthamil78@gmail.com
  சென்னை

  மறுமொழி
 • 4. முத்தமிழ் வேந்தன்  |  1:35 முப இல் ஏப்ரல் 11, 2009

  வீர தமிழன் முத்துகுமரனே!

  ஈழ தமிழர்களின்
  நிலை கண்டு
  மனம் நொந்தாய்!
  தீயில் வெந்தாய்!
  எழுச்சி தந்தாய்!

  உன்
  வீர தியாக மரணம்
  தமிழர்களின் உள்ளத்தில்
  தீயாய் எரிந்துகொண்டிருக்கிறது!

  உன்
  உயர்ந்த நோக்கம்
  நிறைவேறவும்!

  உன்
  ஆத்மா சாந்தியடையவும்
  வேண்டுகிறேன்!

  கண்ணீருடன்,
  முத்தமிழ் வேந்தன்
  muthamil78@gmail.com

  மறுமொழி
 • 5. முத்தமிழ் வேந்தன்  |  1:36 முப இல் ஏப்ரல் 11, 2009

  உலகத் தமிழர்களே!

  ஒன்றுபடுங்கள்!

  போராடுங்கள்!

  சிங்கள
  இனவெறியை
  வேரோடு
  வெட்டி சாய்ப்போம்!

  ஈழத்தில்
  சுதந்திர விதையை
  நட்டு வைப்போம்!

  நன்றி!

  முத்தமிழ் வேந்தன்
  muthamil78@gmail.com

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வீரவணக்கம் தியாகிகளே

பார்வைகள்

 • 52,898 பார்வைகள்

%d bloggers like this: