சீமான், கொளத்தூர் மணிக்கு பிணை

ஜனவரி 19, 2009 at 11:43 முப 2 பின்னூட்டங்கள்

seeman1

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கைது செய்யப்பட்ட திரைப்பட இயக்குனர் சீமான், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி மற்றும் மணியரசன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர்காலனி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக திரைப்பட டைரக்டர் சீமான், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி, கூட்டம் ஏற்பாடு செய்த தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் மீது ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதைத்தொடர்ந்து தேனி மாவட்டம் தேவநாயக்கன்பட்டி பகுதியில் படப்பிடிப்பில் இருந்த டைரக்டர் சீமான், மேட்டூரில் வீட்டில் இருந்த கொளத்தூர் மணி, சென்னையில் இருந்த மணியரசன் ஆகியோரை போலீசார் கைது செய்தார்கள்.

கைது செய்யப்பட்ட டைரக்டர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் ஈரோடு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். 3 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு அசோகன் உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

இந்த நிலையில் டைரக்டர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் சார்பில் வக்கீல் பா.பா.மோகன் ஈரோடு மாஜிஸ்திரேட்டு 1 வது கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் டைரக்டர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோருக்கு ஜாமீன் கேட்டிருந்தார்.

சீமான் பேச்சுக்கு தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கண்டன ஊர்வலங்கள் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் சீமானுக்கு ஜாமீன் கிடைக்குமா என்று அவருடைய ஆதரவாலர்கள் வருத்தத்துடன் இருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில் ஜாமீன் கேட்டு மூவரும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் மூவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

Advertisements

Entry filed under: ஈழ விடுதலை, நிகழ்வுகள்.

சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் பிணையில் விடுதலை கோவை சிறையில் இருந்து பிணையில் விடுதலையான சீமான்

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. ரேகா  |  1:11 பிப இல் ஜனவரி 19, 2009

    வாருங்கள் சீமான் செத்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழனுக்காக குரல் கொடுப்போம் , தமிழ்நாட்டு தமிழனுக்கு சுயமரியாதை உணர்வை ஊட்டு.

    மறுமொழி
  • 2. சிவபெருமாள், தமிழ் நாடு கிக் பாக்சிங் சம்மேளனம்  |  8:35 முப இல் ஜனவரி 23, 2009

    எதிரிகளின் சதியை முறியடித்து
    ஈழ தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் அண்ணண் சீமான் அவர்களை பாராட்டுகிறோம்

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வீரவணக்கம் தியாகிகளே

பார்வைகள்

  • 50,323 பார்வைகள்

RSS திருமா

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.

%d bloggers like this: