நெல்லையில் இயக்குநர் சீமான் சரண்

பிப்ரவரி 20, 2009 at 2:51 பிப 2 பின்னூட்டங்கள்

seemaan2

திருநெல்வேலி  காவல் ஆணையர் முன் சீமான்  சரண் அடைந்தார்.

சரணடைந்த  சீமானை  போலீசார்  கைது செய்தனர். (என்ன கொடும சரவணா)

கடந்த 12ம் தேதி புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவர்கள் இலங்கை தமிழர் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்தனர். டைரக்டர் சீமான், அவர்களை வாழ்த்தி பேசினார்.

அப்போது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசியதாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகளை தாக்கி பேசியதாகவும் புதுச்சேரி போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

சீமானை கைது செய்யும் நடவடிக்கையில் புதுச்சேரி போலீசார் செயல்பட்டு வந்தார்கள்.

இந்த நிலையில், இந்த வழக்கில் புதுச்சேரி போலீசார் கைது செய்தால், தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டுமென்று சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி டி.சுதந்திரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

இந்நிலையில் 19ஆம் தேதி காங்கிரஸ் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சீமானை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியதற்கு, அமைச்சர் ஆற்காடு வீராசாமி இன்று (19.02.09) அல்லது நாளைக்குள் (20.02.09) கைது செய்துவிடுவோம் என்றார். மேலும் சீமானை கைது செய்வதற்காக 5 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஆனாலும் அவர்களால் சீமானை கைது செய்ய முடியவில்லை.

அதனால் சீமானே இன்று நெல்லையில் சரணடைந்தார்.

Entry filed under: நிகழ்வுகள்.

’’நான் பிரபாகரனின் தம்பி… ஓட மாட்டேன்… சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது:தமிழக அரசின் உத்தரவு

2 பின்னூட்டங்கள் Add your own

 • 1. selvaraj  |  3:37 பிப இல் பிப்ரவரி 20, 2009

  he is really a hero. By arresting him congress is again and again alienates itself from the people.

  மறுமொழி
 • 2. maravairemi  |  10:26 முப இல் பிப்ரவரி 23, 2009

  அடே தழிழா மறத்தமிழா – மானம் உன்னில் மருந்திற்கேனுமி(ல்)லையோ?

  உன் இனம் இலங்கையிலே பாடை ஏறிக்கொண்டிருக்கிறது-

  இந்தியமட்டைப்பந்து அணியோ அங்கு சென்று ஆடை கட்டி ஒய்யாரமாக ஆடிக்கொண்டிருக்கிறது –

  நீயும்வேலை வெட்டியை விட்டு ரசிக்கின்றாய்-(அடே தழிழா )

  ஒவ்வொரு ஓட்டத்திற்கும் உன் கைகளைத் தட்டிக்கொள்கிறாயே!-தழிழீழ

  பசிளம் குழந்தையின் வாட்டம் உன் இதயத்தை தட்டவில்லையா?

  இல்லை உனக்கு இதயமே இல்லையா? -(அடே தழிழா )

  முத்துக்குமரன் எனும் தியாகச்சிகரத்தின் கருகிய உடலைக்

  கண்டுமுன் இதயம் உருகவில்லையா?

  உன் இதய நாளங்கள் இறுகவில்லையா?-(அடே தழிழா)

  காலையின் உன் எதிர்ப்புக்கண்டு மத்திய ,மாநில அரசுகள் ஆட்டம் காண்கின்றன என்கின்றாய்

  மாலையில் அவர்களது மேடையே உன்னால்தான் கூட்டம் காண்கின்றது

  அறிவிலாதவனா நீ? எப்போது ஆட்டுமந்தையானாய்? -(அடே தழிழா)

  அங்கே துகிலுரிக்கப்படும் மங்கையை காணுகையில் – உன்னுடன்

  துகிலெழும்பும் உன் தங்கை நினைவுக்கு வரவில்லையா?

  சிதறும் உடல்களை பார்க்கும் போது -உன்னுடன்உணவருந்தும்

  உன் பெற்றோர் நினைவுக்கு வரவில்லையா?-(அடே தழிழா)

  இருட்டிலிருந்து வெளியே வா! இதய பூட்டுக்களை தகர்த்தெறி!!நாம் மறத்தமிழர் உறவுகளை மறந்த தமிழரில்லை!!!மானம் கொண்டு வானம் தொடலாம் வா!!!!!!!!!!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வீரவணக்கம் தியாகிகளே

பார்வைகள்

 • 52,898 பார்வைகள்

%d bloggers like this: