Archive for ஏப்ரல், 2009

நிபந்தனை ஜாமீனில் சீமான் விடுதலை!

seeman

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக புதுச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்த இயக்குநர் சீமான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நெல்லை போலீசார் அவரைக் கைது செய்ததை சென்னை உயர்நீதிமன்றமும் சமீபத்தில் ரத்து செய்தது நினைவிருக்கும்.

இதைத் தொடர்ந்து, நீதிமன்ற நடைமுறைகள் முடிந்த பிறகு நாளை அல்லது நாளை மறுநாள் காலை சீமான் விடுதலையாகி வெளியில் வருகிறார்.

முன்னதாக புதுச்சேரி வழக்கில் ஜாமீன் கேட்டு புதுச்சேரி மாவட்ட தலைமை நீதிபதி கிருஷ்ணாராஜாவிடம் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார் இயக்குநர் சீமான்.

நேற்று அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கிருஷ்ணாராஜா, ரூ.10 ஆயிரத்திற்கு 2 பேர் சொத்து ஜாமீன் கொடுக்க வேண்டும் என்றும், வெளியில் சென்று சாட்சிகளைக் கலைக்கவோ, அச்சுறுத்துவோ கூடாது என்றும் சீமானுக்கு உத்தரவிட்டார்.

ஏப்ரல் 25, 2009 at 11:55 முப 3 பின்னூட்டங்கள்

சீமானை விடுதலை செய்யுமாறு ஐகோர்ட் உத்தரவு

seemaan2

இயக்குனர் சீமானை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் அவர் மீது தமிழக அரசு தொடரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக சீமான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து சீமானின் சகோதரர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், சீமானை விடுதலை செய்யுமாறும், அவர் மீது தொடரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கையும் ரத்து செய்யுமாறும் உத்தரவிட்டார்.

ஏப்ரல் 17, 2009 at 7:04 முப 11 பின்னூட்டங்கள்


வீரவணக்கம் தியாகிகளே

பார்வைகள்

  • 53,118 பார்வைகள்

RSS திருமா