Archive for ஓகஸ்ட், 2009
இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்:நாம் தமிழர் அமைப்பு தீர்மானம்
தமிழக மக்கள் மின்சாரப் பற்றாக்குறையினால் திண்டாடும் இவ்வேளையில், இந்திய அரசு இலங்கைக்கு 1000மெகாவாட் மின்சாரம் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என நாம் தமிழர் அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தூத்துக்குடியில் நாம் தமிழர் இயக்கம் சார்பில், முள்வேலியில் அடைக்கப்பட்ட ஈழத் தமிழர்களை உடனடியாக அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்ப வலியுறுத்தி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் இயக்குநர் சீமான் தலைமையில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், வடக்கின் வசந்தம் திட்டத்திலிருந்து இந்திய கட்டுமான தொழில் குழுமம் வெளியேற வேண்டும். மேலும் இக்குழுமத்தில் உறுப்பினராக உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் வெளியேறுவற்கு தி.க. தலைவர் வீரமணி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழர்கள் உழைப்பு மற்றும் பணத்தில் வளர்ந்த ஐ.டி.இ.ஏ. தொலைத் தொடர்பு நிறுவனம் வன்னி மக்களின் வாழ்வினைச் சிதைக்கும் எவ்வித திட்டத்திற்கும் துணை போக கூடாது. இல்லையெனில் அந்நிறுவனத்தை எதிர்த்து நாம் தமிழர் இயக்கம் போராடும்.
தமிழக மீனவர்களின் படுகொலைக்கு காரணமான இலங்கை அரசையும் அதன் அதிபர் ராஜபக்சேவையும் பண்ணாட்டுச் சட்டத்தின்கீழ் தண்டிக்க மத்திய, மாநில அரசுகள் ஆவண செய்ய வேண்டும். மேலும், இதுதொடர்பாக ராமேஸ்வரம் மீனவர்களின் அனைத்து போராட்டத்திற்கும் நாம் தமிழர் இயக்கம் அதரவு அளிக்கும்.
பிற தேசிய மொழிகளை அடக்குமுறை செய்யும் வகையில், மத்திய அரசு கொண்டுவரும் இந்தி திணிப்பு பாடத் திட்டத்தை உடனே கைவிட வேண்டும். உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்ககோரி நாம் தமிழர் இயக்கம் சார்பில் பேரணி
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தூத்துக்குடியில் சீமான் தலைமையில் நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த பேரணி நடைபெற்றது.
இலங்கையில் போர் முடிந்து 3 மாதங்கள் ஆகியும், முள் வேலிக்குள் வாழ்விழந்து கிடக்கும் தமிழ் மக்களை உடனடியாக, அவரவர் தம் இருப்பிடங்களுக்கு சென்று குடியேற அனுமதிக்க வேண்டும்.
அவர்களுக்குத் தேவையான உணவு வசதிகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். பச்சிளம் குழந்தைகள் பால் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
தொடர்ந்து இந்திய அரசும், தமிழக அரசும் இலங்கைக்கு பண உதவி செய்வதை நிறுத்த வேண்டும்.
நம் நாட்டில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்
வடக்கின் வசந்தம் திட்டத்திலிருந்து இந்திய கட்டுமான தொழில் குழுமம் வெளியேற வேண்டும்.
இக்குழுமத்தில் உறுப்பினராக உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் வெளியேறுவற்கு தி.க. தலைவர் வீரமணி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழர்கள் உழைப்பு மற்றும் பணத்தில் வளர்ந்த ஐ.டி.இ.ஏ. தொலைத் தொடர்பு நிறுவனம் வன்னி மக்களின் வாழ்வினைச் சிதைக்கும் எவ்வித திட்டத்திற்கும் துணை போக கூடாது. இல்லையெனில் அந்நிறுவனத்தை எதிர்த்து நாம் தமிழர் இயக்கம் போராடும்.
தமிழக மீனவர்களின் படுகொலைக்கு காரணமான இலங்கை அரசையும் அதன் அதிபர் ராஜபக்சேவையும் பண்ணாட்டுச் சட்டத்தின்கீழ் தண்டிக்க மத்திய, மாநில அரசுகள் ஆவண செய்ய வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகில் இருந்து பேரணி தொடங்கியது.
இலங்கைத் தமிழர்களுக்காக உயிர்நீத்த கொள்கைநல்லூர் முத்துக்குமரனின் நினைவு ஜோதியை ஏந்தியவாறு பேரணியை நாம் தமிழர் இயக்கதின் பொறுப்பாளர் இயக்குநர் சீமான் தொடக்கி வைத்தார்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள்,
“நீயும் தமிழன், நானும் தமிழன், நாம் தமிழராய் ஒன்றிணைவோம்”.
“வென்றெடுப்போம், வென்றெடுப்போம்”, “தமிழர் உரிமையை வென்றெடுப்போம்”,
“அறுத்தெறிவோம், அறுத்தெறிவோம், நம் சொந்தங்களை சிறைபிடித்த, முள்வேலியை அறுத்தெறிவோம்”.
“தடையை நீக்குவோம், தடையை நீக்குவோம், புலிகள் மீதான தடையை நீக்குவோம்” போன்ற பல்வேறு கோஷங்களை முழங்கியவாறு ஊர்வலமாக வந்தனர்.
ஊர்வலத்தின் முன்புறம் யானையில் நாம் தமிழர் இயக்கக் கொடியை ஒருவர் ஏந்தியவாறு வந்தார்.
ஊர்வலத்தில் வந்திருந்த இளைஞர்கள் அனைவரும்,பிரபாகரன் படம் பொறித்த, தலைவர் என்ற வார்த்தையுடன் கூடிய பனியன் அணிந்திருந்தனர். பிரபாகரன் படத்தை கைகளில் ஏந்தி வந்தனர்.
திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை உட்பட தமிழகம் முழுவதிலும் இருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியில் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள், இலங்கை அகதிகள் முகாமில் மருத்துவ வசதியின்றி காயங்களுடன் வாடும் தமிழர்களின் நிலையைக் குறிக்கும் வகையில், தங்களது கை, கால், மற்றும் உடல் காயங்கள் ஏற்பட்டது போல் மருந்து கட்டுகளுடன் கலந்து சிறப்பித்தனர்.
இக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய இயக்குநர் சீமான்,
’’என்மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டது. என்னுடைய வழக்கின்போது, தடை செய்யப்பட்ட அமைப்பின் படத்தையோ, அல்லது அதற்கு ஆதரவாக பேசுவதோ தவறல்ல என நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இறையாண்மையைச் பற்றி பேசும் இந்தியப் பேரரசு, தமிழர் தேசியத்தின் உரிமையைப் பறிக்கிறது. அமெரிக்காவில் கூட தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக போராட அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் இங்கு, சட்டம் போட்டுத் தடுக்கிறார்கள்.
இலங்கைக்கு உதவிவரும் இந்திய பேரரசு தற்போது 1000 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இந்த பணத்தில்தான் இராணுவத்திற்கு சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது. போர் முடிந்து 3 மாதகாலம் ஆகியும், முள்வேலிக்குள் சிக்கிக் கிடக்கும் தமிழர்களின் நிலை பற்றி, தமிழக அரசியல்வாதிகள் மெளனமாக இருக்கின்றனர்.
மத்திய அரசும் மெளனம் சாதிக்கிறது. போர் முடிந்ததும் அதிகாரப்பகிர்வு அளிக்கப்படும் என்ற பேச்சு, தற்போது எழவில்லை. இந்திய பேரரசு ஒருநாள் இதற்காக கவலைப்படும் காலம் வரும்’’.
’’இலங்கைப் பிரச்சனையில் ஒரே ஒரு தலைவன்தான் ஆதரவாகச் செயல்பட்டார். அதுதான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.
தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு இருக்கா என்றும், தடை செய்யப்பட்டது சரிதானா? என்றும் வாக்கெடுப்பு நடத்தினால் 90%பேர் தமிழர்கள் ஆதரவாக வாக்களிப்பார்கள். அதை நடத்த இந்த அரசு தயாரா?
சிங்களவன் ஒருநாளும் திருந்தமாட்டான். ஏனென்றால் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு இந்தியாவை சீண்டிப் பார்ப்பான்.
உலகத்திலேயே மிகப்பெரிய இராணுவத்தை தனியொரு மனிதனாக பிரபாகரன் உருவாக்கி வைத்திருந்தார்.விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் விரைவில் வருவார். அதுவரை அமைதியாக இருங்கள்’’ என்று அவர் பேசினார்.
29ம் தேதி தூத்துக்குடியில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்
சிறீலங்காவில் போர் முடிந்து 3 மாதங்களுக்கு மேலாகியும், 3 இலட்சம் தமிழர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். 20 நாடுகளின் துணையோடு தான் போரில் வெற்றி பெற்றதாக சிறீலங்கா அதிபர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போது 3 இலட்சம் தமிழர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்துவதை அந்த 20 நாடுகளில் ஒன்று கூட கண்டிக்காதது ஏன்?
தமிழ் இனம் அங்கு அழிந்து கொண்டிருக்கிறது. அதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கின்றன.
இதை கண்டித்தும், ஐ.நா மேற்பார்வையில் அவரவர் வாழ்விடங்களில், அங்குள்ள மக்களை மீள் குடியமர்த்தக்கூறியும், ‘நாம் தமிழர் இயக்கம்’ சார்லி ஜூலை மாதம் மதுரையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினோம்.
மீண்டும், 29 ஆம் திகதி தூத்துக்குடியுல் பேரணி நடத்தவுள்ளோம்.
இலங்கையில் தமிழர்கள் படும் இன்னல்கள் குறித்து இந்தியா மற்றும் சர்வதேச சமுதாயத்தின் கவனத்தை திருப்பும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்வுகளை நடத்துவோம். என சீமான் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆண்ட தமிழினம் அடைபட்டுக்கிடகுது முள்வேலி சிறைக்குள். அறுத்தெரிவோம் வாரீர் நாம் தமிழர் என உரக்க கோஷமிட்டு, இச்சந்திப்பை நிறைவு செய்துகொண்டார் இயக்குனர் சீமான்.
தூத்துக்குடி பத்திரிக்கையாளர் சந்திப்பு
22.08.2009 தூத்துக்குடி பத்திரிக்கையாளர் சந்திப்பு காணொளி
ஈழ மக்களுக்காக ராணுவ வாகனங்களை தாக்கிவிட்டு சிறைக்கு சென்றது பெருமைக்குறிய விஷயம்
ஈழ மக்களுக்காக ராணுவ வாகனங்களை தாக்கிவிட்டு சிறைக்கு சென்றது பெருமைக்குறிய விஷயம் என்று இயக்குனர் சீமான் தெரிவித்தார்.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியளிப்பு பொதுக்கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.
இதில் திரைப்பட இயக்குனர் சீமான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினார். அப்போது ஈழ மக்களுக்காக போராட்டம் நடத்தி சிறைக்கு சென்றது பெருமை பட விஷயம் என்று தெரிவித்தார்.
இந்த பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி புதுச்சேரி மாநில செயலாளர் தந்தைபிரியன், லோகு.அய்யப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.