இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்:நாம் தமிழர் அமைப்பு தீர்மானம்

ஓகஸ்ட் 30, 2009 at 10:17 முப 1 மறுமொழி

தமிழக மக்கள் மின்சாரப் பற்றாக்குறையினால் திண்டாடும் இவ்வேளையில், இந்திய அரசு இலங்கைக்கு 1000மெகாவாட் மின்சாரம் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என நாம் தமிழர் அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தூத்துக்குடியில் நாம் தமிழர் இயக்கம் சார்பில், முள்வேலியில் அடைக்கப்பட்ட ஈழத் தமிழர்களை உடனடியாக அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்ப வலியுறுத்தி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் இயக்குநர் சீமான் தலைமையில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், வடக்கின் வசந்தம் திட்டத்திலிருந்து இந்திய கட்டுமான தொழில் குழுமம் வெளியேற வேண்டும். மேலும் இக்குழுமத்தில் உறுப்பினராக உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் வெளியேறுவற்கு தி.க. தலைவர் வீரமணி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழர்கள் உழைப்பு மற்றும் பணத்தில் வளர்ந்த ஐ.டி.இ.ஏ. தொலைத் தொடர்பு நிறுவனம் வன்னி மக்களின் வாழ்வினைச் சிதைக்கும் எவ்வித திட்டத்திற்கும் துணை போக கூடாது. இல்லையெனில் அந்நிறுவனத்தை எதிர்த்து நாம் தமிழர் இயக்கம் போராடும்.

தமிழக மீனவர்களின் படுகொலைக்கு காரணமான இலங்கை அரசையும் அதன் அதிபர் ராஜபக்சேவையும் பண்ணாட்டுச் சட்டத்தின்கீழ் தண்டிக்க மத்திய, மாநில அரசுகள் ஆவண செய்ய வேண்டும். மேலும், இதுதொடர்பாக ராமேஸ்வரம் மீனவர்களின் அனைத்து போராட்டத்திற்கும் நாம் தமிழர் இயக்கம் அதரவு அளிக்கும்.

பிற தேசிய மொழிகளை அடக்குமுறை செய்யும் வகையில், மத்திய அரசு கொண்டுவரும் இந்தி திணிப்பு பாடத் திட்டத்தை உடனே கைவிட வேண்டும். உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Entry filed under: ஈழ விடுதலை, நாம் தமிழர், நிகழ்வுகள்.

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்ககோரி நாம் தமிழர் இயக்கம் சார்பில் பேரணி

1 பின்னூட்டம் Add your own

 • 1. RajKUMAR  |  7:33 பிப இல் ஓகஸ்ட் 30, 2009

  Tamilar vaalvil oli etrum naal veku tholaivil illai, eela thamilar viraivil eelam adaivarkal, seemanin eluchi maa perum puratchi ya kum, nichayam seeman vetri peruvaar, eelam vidyum, prabakarn varuvar, naam thamilar iyakkathil sirappurai aatruvaar..
  ithu nichayam…
  Vaalka seeman, valarka NAAM THAMILAR IYAKKAM

  TAMILARKALIN THAAGAM TAMILEELA THAAYAGAM..

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வீரவணக்கம் தியாகிகளே

பார்வைகள்

 • 53,118 பார்வைகள்

RSS திருமா


%d bloggers like this: