இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்:நாம் தமிழர் அமைப்பு தீர்மானம்

தமிழக மக்கள் மின்சாரப் பற்றாக்குறையினால் திண்டாடும் இவ்வேளையில், இந்திய அரசு இலங்கைக்கு 1000மெகாவாட் மின்சாரம் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என நாம் தமிழர் அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தூத்துக்குடியில் நாம் தமிழர் இயக்கம் சார்பில், முள்வேலியில் அடைக்கப்பட்ட ஈழத் தமிழர்களை உடனடியாக அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்ப வலியுறுத்தி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் இயக்குநர் சீமான் தலைமையில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், வடக்கின் வசந்தம் திட்டத்திலிருந்து இந்திய கட்டுமான தொழில் குழுமம் வெளியேற வேண்டும். மேலும் இக்குழுமத்தில் உறுப்பினராக உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் வெளியேறுவற்கு தி.க. தலைவர் வீரமணி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழர்கள் உழைப்பு மற்றும் பணத்தில் வளர்ந்த ஐ.டி.இ.ஏ. தொலைத் தொடர்பு நிறுவனம் வன்னி மக்களின் வாழ்வினைச் சிதைக்கும் எவ்வித திட்டத்திற்கும் துணை போக கூடாது. இல்லையெனில் அந்நிறுவனத்தை எதிர்த்து நாம் தமிழர் இயக்கம் போராடும்.

தமிழக மீனவர்களின் படுகொலைக்கு காரணமான இலங்கை அரசையும் அதன் அதிபர் ராஜபக்சேவையும் பண்ணாட்டுச் சட்டத்தின்கீழ் தண்டிக்க மத்திய, மாநில அரசுகள் ஆவண செய்ய வேண்டும். மேலும், இதுதொடர்பாக ராமேஸ்வரம் மீனவர்களின் அனைத்து போராட்டத்திற்கும் நாம் தமிழர் இயக்கம் அதரவு அளிக்கும்.

பிற தேசிய மொழிகளை அடக்குமுறை செய்யும் வகையில், மத்திய அரசு கொண்டுவரும் இந்தி திணிப்பு பாடத் திட்டத்தை உடனே கைவிட வேண்டும். உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஓகஸ்ட் 30, 2009 at 10:17 முப 1 மறுமொழி

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்ககோரி நாம் தமிழர் இயக்கம் சார்பில் பேரணி

seemaan_elam1seemaan_elam2seemaan_elam3seemaan_elam4

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தூத்துக்குடியில் சீமான் தலைமையில் நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த பேரணி நடைபெற்றது.

இலங்கையில் போர் முடிந்து 3 மாதங்கள் ஆகியும், முள் வேலிக்குள் வாழ்விழந்து கிடக்கும் தமிழ் மக்களை உடனடியாக, அவரவர் தம் இருப்பிடங்களுக்கு சென்று குடியேற அனுமதிக்க வேண்டும்.

அவர்களுக்குத் தேவையான உணவு வசதிகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். பச்சிளம் குழந்தைகள் பால் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

தொடர்ந்து இந்திய அரசும், தமிழக அரசும் இலங்கைக்கு பண உதவி செய்வதை நிறுத்த வேண்டும்.

நம் நாட்டில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்

வடக்கின் வசந்தம் திட்டத்திலிருந்து இந்திய கட்டுமான தொழில் குழுமம் வெளியேற வேண்டும்.

இக்குழுமத்தில் உறுப்பினராக உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் வெளியேறுவற்கு தி.க. தலைவர் வீரமணி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழர்கள் உழைப்பு மற்றும் பணத்தில் வளர்ந்த ஐ.டி.இ.ஏ. தொலைத் தொடர்பு நிறுவனம் வன்னி மக்களின் வாழ்வினைச் சிதைக்கும் எவ்வித திட்டத்திற்கும் துணை போக கூடாது. இல்லையெனில் அந்நிறுவனத்தை எதிர்த்து நாம் தமிழர் இயக்கம் போராடும்.

தமிழக மீனவர்களின் படுகொலைக்கு காரணமான இலங்கை அரசையும் அதன் அதிபர் ராஜபக்சேவையும் பண்ணாட்டுச் சட்டத்தின்கீழ் தண்டிக்க மத்திய, மாநில அரசுகள் ஆவண செய்ய வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகில் இருந்து பேரணி தொடங்கியது.

இலங்கைத் தமிழர்களுக்காக உயிர்நீத்த கொள்கைநல்லூர் முத்துக்குமரனின் நினைவு ஜோதியை ஏந்தியவாறு பேரணியை நாம் தமிழர் இயக்கதின் பொறுப்பாளர் இயக்குநர் சீமான் தொடக்கி வைத்தார்.

பேரணியில் கலந்து கொண்டவர்கள்,

“நீயும் தமிழன், நானும் தமிழன், நாம் தமிழராய் ஒன்றிணைவோம்”.

“வென்றெடுப்போம், வென்றெடுப்போம்”, “தமிழர் உரிமையை வென்றெடுப்போம்”,

“அறுத்தெறிவோம், அறுத்தெறிவோம், நம் சொந்தங்களை சிறைபிடித்த, முள்வேலியை அறுத்தெறிவோம்”.

“தடையை நீக்குவோம், தடையை நீக்குவோம், புலிகள் மீதான தடையை நீக்குவோம்” போன்ற பல்வேறு கோஷங்களை முழங்கியவாறு ஊர்வலமாக வந்தனர்.

ஊர்வலத்தின் முன்புறம் யானையில் நாம் தமிழர் இயக்கக் கொடியை ஒருவர் ஏந்தியவாறு வந்தார்.

ஊர்வலத்தில் வந்திருந்த இளைஞர்கள் அனைவரும்,பிரபாகரன் படம் பொறித்த, தலைவர் என்ற வார்த்தையுடன் கூடிய பனியன் அணிந்திருந்தனர். பிரபாகரன் படத்தை கைகளில் ஏந்தி வந்தனர்.

திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை உட்பட தமிழகம் முழுவதிலும் இருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியில் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள், இலங்கை அகதிகள் முகாமில் மருத்துவ வசதியின்றி காயங்களுடன் வாடும் தமிழர்களின் நிலையைக் குறிக்கும் வகையில், தங்களது கை, கால், மற்றும் உடல் காயங்கள் ஏற்பட்டது போல் மருந்து கட்டுகளுடன் கலந்து சிறப்பித்தனர்.

இக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய இயக்குநர் சீமான்,

’’என்மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டது. என்னுடைய வழக்கின்போது, தடை செய்யப்பட்ட அமைப்பின் படத்தையோ, அல்லது அதற்கு ஆதரவாக பேசுவதோ தவறல்ல என நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இறையாண்மையைச் பற்றி பேசும் இந்தியப் பேரரசு, தமிழர் தேசியத்தின் உரிமையைப் பறிக்கிறது. அமெரிக்காவில் கூட தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக போராட அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் இங்கு, சட்டம் போட்டுத் தடுக்கிறார்கள்.

இலங்கைக்கு உதவிவரும் இந்திய பேரரசு தற்போது 1000 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இந்த பணத்தில்தான் இராணுவத்திற்கு சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது. போர் முடிந்து 3 மாதகாலம் ஆகியும், முள்வேலிக்குள் சிக்கிக் கிடக்கும் தமிழர்களின் நிலை பற்றி, தமிழக அரசியல்வாதிகள் மெளனமாக இருக்கின்றனர்.

மத்திய அரசும் மெளனம் சாதிக்கிறது. போர் முடிந்ததும் அதிகாரப்பகிர்வு அளிக்கப்படும் என்ற பேச்சு, தற்போது எழவில்லை. இந்திய பேரரசு ஒருநாள் இதற்காக கவலைப்படும் காலம் வரும்’’.

’’இலங்கைப் பிரச்சனையில் ஒரே ஒரு தலைவன்தான் ஆதரவாகச் செயல்பட்டார். அதுதான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு இருக்கா என்றும், தடை செய்யப்பட்டது சரிதானா? என்றும் வாக்கெடுப்பு நடத்தினால் 90%பேர் தமிழர்கள் ஆதரவாக வாக்களிப்பார்கள். அதை நடத்த இந்த அரசு தயாரா?

சிங்களவன் ஒருநாளும் திருந்தமாட்டான். ஏனென்றால் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு இந்தியாவை சீண்டிப் பார்ப்பான்.

உலகத்திலேயே மிகப்பெரிய இராணுவத்தை தனியொரு மனிதனாக பிரபாகரன் உருவாக்கி வைத்திருந்தார்.விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் விரைவில் வருவார். அதுவரை அமைதியாக இருங்கள்’’ என்று அவர் பேசினார்.

ஓகஸ்ட் 29, 2009 at 10:10 முப பின்னூட்டமொன்றை இடுக

29ம் தேதி தூத்துக்குடியில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்

seemaan
சிறீலங்காவில் போர் முடிந்து 3 மாதங்களுக்கு மேலாகியும், 3 இலட்சம் தமிழர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். 20 நாடுகளின் துணையோடு தான் போரில் வெற்றி பெற்றதாக சிறீலங்கா அதிபர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போது 3 இலட்சம் தமிழர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்துவதை அந்த 20 நாடுகளில் ஒன்று கூட கண்டிக்காதது ஏன்?

தமிழ் இனம் அங்கு அழிந்து கொண்டிருக்கிறது. அதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கின்றன.

இதை கண்டித்தும், ஐ.நா மேற்பார்வையில் அவரவர் வாழ்விடங்களில், அங்குள்ள மக்களை மீள் குடியமர்த்தக்கூறியும், ‘நாம் தமிழர் இயக்கம்’ சார்லி ஜூலை மாதம் மதுரையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினோம்.

மீண்டும், 29 ஆம் திகதி தூத்துக்குடியுல் பேரணி நடத்தவுள்ளோம்.

இலங்கையில் தமிழர்கள் படும் இன்னல்கள் குறித்து இந்தியா மற்றும் சர்வதேச சமுதாயத்தின் கவனத்தை திருப்பும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்வுகளை நடத்துவோம். என சீமான் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆண்ட தமிழினம் அடைபட்டுக்கிடகுது முள்வேலி சிறைக்குள். அறுத்தெரிவோம் வாரீர் நாம் தமிழர் என உரக்க கோஷமிட்டு, இச்சந்திப்பை நிறைவு செய்துகொண்டார் இயக்குனர் சீமான்.

ஓகஸ்ட் 24, 2009 at 3:59 பிப 1 மறுமொழி

தூத்துக்குடி பத்திரிக்கையாளர் சந்திப்பு

22.08.2009 தூத்துக்குடி பத்திரிக்கையாளர் சந்திப்பு காணொளி

ஓகஸ்ட் 22, 2009 at 9:16 முப பின்னூட்டமொன்றை இடுக

ஈழ மக்களுக்காக ராணுவ வாகனங்களை தாக்கிவிட்டு சிறைக்கு சென்றது பெருமைக்குறிய விஷயம்

ஈழ மக்களுக்காக ராணுவ வாகனங்களை தாக்கிவிட்டு சிறைக்கு சென்றது பெருமைக்குறிய விஷயம் என்று இயக்குனர் சீமான் தெரிவித்தார்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியளிப்பு பொதுக்கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.

இதில் திரைப்பட இயக்குனர் சீமான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினார். அப்போது ஈழ மக்களுக்காக போராட்டம் நடத்தி சிறைக்கு சென்றது பெருமை பட விஷயம் என்று தெரிவித்தார்.

இந்த பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி புதுச்சேரி மாநில செயலாளர் தந்தைபிரியன், லோகு.அய்யப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஓகஸ்ட் 2, 2009 at 2:25 முப பின்னூட்டமொன்றை இடுக

ஈழ மக்களுக்கு இந்தியா செய்த துரோகத்தை யாராலும் மறுக்க முடியாது

ஜூலை 24, 2009 at 8:29 பிப பின்னூட்டமொன்றை இடுக

ஈழ மக்களுக்கு இந்தியா செய்த துரோகத்தை யாராலும் மறுக்க முடியாது என்று திரைப்பட இயக்குனர் சீமான் தெரிவித்தார்.

லங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ராணுவ வாகனத்தை தாக்கியர்வன் மற்றும் தமிழ் ஈழ ஆதரவாளர்களுக்கு வழக்கு நிதி வழங்கும் விழா சென்னையி;ல் நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய இயக்குனர் சீமான், இலங்கைத்தமிழர்களை கொத்துக் கொத்தாக கொலை செய்ய இந்தியா உதவியதை யாராலும் மறுக்க முடியாது என்று தெரிவித்தார்.

உலகிலேயே தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, விடுதலை சிறுத்தைகள் எனும் கட்சியைத் தொடங்கி போராடி வரும் ஒரே விடிவெள்ளி தொல்.திருமாவளவன் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.

இந்த விழாவில் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரன், கட்சியின் தலைவர் கொளத்தூர் மணி, தியாகச்சுடர் அண்ணாமலை உட்பட பலர் பங்கேற்றனர்.

thanks : : tamilan television News

ஜூலை 22, 2009 at 8:45 முப பின்னூட்டமொன்றை இடுக

தமிழ்நாட்டில் உள்ள 30 லட்சம் மக்கள் குரல் கொடுத்திருந்தால் போர் நிறுத்தப்பட்டிருக்கும்

இந்த மண்ணில் யாருக்கும் தமிழர்களின் துயர் துடைக்க ஆசை இல்லை. ஆறரை கோடி தமிழர்களில் 30 லட்சம் தமிழர்களாவது ஒரே இடத்தில் நின்று குரல் கொடுத்து இருந்தால் அங்கு போர் நிறுத்தப்பட்டு இருக்கும் அதை நாம் செய்யாதது பெரிய துரோகமாகும் என தமிழின உணர்வாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிக்க அந்த ‘முள்வேலியை அகற்றுவோம் வாரீர்’ என்ற முழக்கத்தோடு இயக்குநர் சீமான் தலைமையில் தமிழ்நாட்டின் மதுரையில் நேற்று சனிக்கிழமை ஊர்வலம் நடைபெற்றது.

‘ஜான்சி ராணி’ பூங்காவில் இருந்து தொடங்கிய ஊர்வலம் வடக்கு மாசி, மேலமாசி வீதி சந்திப்பிற்கு வந்தது.

இங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இயக்குநர் சீமான் உரையாற்றியபோது மேலும் தெரிவித்துள்ளதாவது:

தன் கணவனை கொன்றதற்காக நீதி கேட்ட கண்ணகி பிறந்த மண்ணில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. எங்களுக்கு பதவி ஆசையும் கிடையாது. எங்கள் நோக்கம் யாருக்கும் எதிரானதும் அல்ல.

காயம்பட்ட எங்கள் இனத்தை காப்பதற்காகதான் இந்த கூட்டம். அடுத்த நடவடிக்கை என்ன? இன்னும் நாம் விழிக்கவில்லை என்றால் என்ன ஆவோம்? என்பதை விளக்கதான் இந்த கூட்டம். இங்கு இவ்வளவு பெரிய கூட்டம் கூடி இருப்பதற்கு காரணம் ‘நாம் தமிழர்’ என்ற உணர்வு இன்னும் இருப்பதால்தான்.

இலங்கையில் மூன்றரை லட்சம் தமிழர்கள் முள்வேலிக்குள் இருக்கிறார்கள். புத்தர் கொள்கையை கடைப்பிடிப்பதாக கூறிவரும் சிறிலங்கா அரசு மனித உயிருக்கு எவ்வளவு பெரிய தீங்கு செய்துள்ளது.

முள்வேலிக்குள் இருக்கும் தமிழர்கள் தாகத்துக்கு தண்ணீர் கேட்டால் சிங்கள வெறியன் சிறுநீரை கொடுக்கும் நிலை உள்ளது. சினிமாவில் ஒரு மிருகத்தை வைத்து படம் எடுத்தால் கூட முடிந்ததும் அந்த மிருகம் உயிருடன் இருக்கிறதா? என்று கேட்டுவிட்டுதான் தணிக்கை குழு சான்றிதழ் தருகிறது. சித்திரவதை இருக்கக்கூடாது என்ற சட்டம் இருக்கும் இந்த தேசத்தில், அங்கு கொடுமைக்கு ஆளாகும் மக்களை ஏன் காப்பாற்ற மனம் வரவில்லை.

விடுதலைப் புலிகளை ஒழித்துவிட்டால் தமிழர்களை சுதந்திரமாக வாழ வைப்போம் என்று ராஜபக்ச கூறினார். இதை இந்திய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். தற்போது அவர்கள் கருத்துப்படி விடுதலைப் புலிகள் இல்லை. பிறகு ஏன் அங்கு வாழும் தமிழர்களுக்கு இந்த நிலை?

இந்த மண்ணில் யாருக்கும் தமிழர்களின் துயர் துடைக்க ஆசை இல்லை. ஆறரை கோடி தமிழர்களில் 30 லட்சம் தமிழர்களாவது ஒரே இடத்தில் நின்று குரல் கொடுத்து இருந்தால் அங்கு போர் நிறுத்தப்பட்டு இருக்கும் அதை நாம் செய்யாதது பெரிய துரோகமாகும்.

இந்த துரோகத்தை நீக்க முதல் கட்டமாக முள்வேலிக்குள் அடைக்கபட்டுள்ள தமிழர்களை மீட்டு அவரவர் இடத்தில் குடியமர்த்தவும், விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் மீதான தடையையும் மத்திய அரசு நீக்க வேண்டும்.

நம் எண்ணம் நிறைவேற தேவை ஒற்றுமை. எனவே ஜாதி, மதம், கட்சி போன்ற வேற்றுமையை மறந்து நாம் அனைவரும் ‘தமிழர்’ என்ற உணவுர்வுடன் உலக தமிழர்கள் செயற்பட்டால் போதும் நம் இலக்கை விரைவில் அடையலாம். இலங்கை சிங்களவர்களின் நாடு அல்ல. நம் பாட்டன் ஆண்ட பூமி என்றார் அவர்.

இந்த கூட்டத்தில் அருட்தந்தை ஜெகத் கஸ்பர், சாகுல் அமீது, டொக்டர் சர்மிளா, மாநில ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி சிவக்குமார், இயக்குனர்கள் சிபி சந்தர், மித்ரன், சட்டத்தரணிகளான மணி செந்தில், ஏ.கே.இராமசாமி, நெடுஞ்செழியன் உட்பட பலர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

பொதுக்கூட்ட மேடையின் முன்புறம் இலங்கை தமிழர்களின் பிரச்சினையை நினைவுபடுத்தும் வகையில் முட்கம்பிகளால் கட்டப்பட்டு இருந்தது.

முன்னதாக முள் வேலியில் அடைக்கப்பட்டு இருந்த மேடையில் இலங்கை தமிழர்கள் படும் அவலங்களை சித்தரிக்கும் நாடகம் நடத்தப்பட்டது.

சிங்களப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் தமிழர்களை தாக்கும் காட்சியை கண்ட பலரின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது காண முடிந்தது. ஆவேசம் அடைந்த ஒரு கையில் இருந்த ஏதோ ஒரு பொருளைக்கொண்டு சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்தவரைப் போன்று வேடம் அணிந்தவர் மீது வீசி எறிந்ததால் கூட்டத்தில் பரபரப்பு காணப்பட்டது.

ஜூலை 18, 2009 at 6:44 முப 1 மறுமொழி

பணமா, இனமா

பணமா, இனமா? தீர்மானிக்கும் @தர்தல் இது புதுச்@Œரியில் இயக்குநர் சீமான் @வண்டு@காள் இந்த நாடாளுமன்றத் @தர்தலில் பணம், இனம் என்ற இருŒக்திகளுக்கிடை@ய @பார் நடக்கிறது. இதில் எது வெல்ல @வண்டும் என்பதை தீர்மானியுங்கள். இந்த முறை Œõதி, மதம், பணம் இவையெல்லாவற்றையும் மறந்து கை சின்னத்தில் வாக்களிக்காமல், மாம்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று இயக்குநர் சீமான் @வண்டு@காள் விடுத்தார். காங்கிர”க்கு வாக்களிக்கக்கூடாது ஏன்? விளக்கப் பொதுக்கூட்டம் பெரியார் திராவிடர் கழகம் Œõர்பில் புதுச்@Œரியில் உள்ள பெரியார் திடலில் @நற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இயக்குநர்கள் சீமான், ஆர்.@க. öŒல்வமணி, Œந்தனக்காடு கௌதமன், தாமிரா, பாவலர் அறிவுமதி, பாவலர் சி@னகன் ஆகி@யார் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்தக்கூட்டத்தில் இயக்குநர் சீமான் உரையாற்றுகையில், “இந்த நாடாளுமன்றத் @தர்தலில் இருŒக்திகளுக்கிடை@ய @பார் நடக்கிறது. ஒன்று பணம். மற்றொன்று இனம். இனத்திற்காக ஒன்றும் öŒ#யாதவர்கள் தமிழினத்தின் முன் வாக்குக் @கட்டு வரும்@பாது ஒரு வாக்குக்கு 200, 300, 500 ரூபா# கொடுத்து வென்றுவிட @வண்டும் என்று நினைத்து ஒரு தொகுதிக்கு 100 @காடி ரூபா# வரை ஒதுக்கியிருக்கிறார்கள். இதுதான் கண்ணியமிக்க Œனநாயகமா? தமிழ் öŒõந்தங்களின் குழந்தைகள் பசியால் வாடி Œõவும்@பாது பால் கொடுக்க வராதவர்கள், வாக்குக் @கட்டு வரும்@பாது பணத்தைக் கொடுத்துவிட்டு பால் மீது Œத்தியம் வாங்குகிறார்கள். தமிழச்சிகளின் மானத்தை காக்க சீலை கொடுக்காத நீங்கள், வாக்குகளை பொறுக்க சீலை கொடுக்கிறீர்க@ள? உங்களுக்கு வெட்கமில்லையா? அவமானமாக இல்லையா? அசிங்கமாக இல்லையா? ” என்றார். தொடர்ந்து @பசிய அவர்,“கடந்த எத்தனை@யா @தர்தல்கள் பல சிக்கல்கள் முன்னிறுத்தப்பட்டு @தர்தலை Œந்தித்திருக்கி@றாம். இந்தத் @தர்தலில் முன்னிறுத்தப்பட்டிருப்பது தமிழனின் உயிர் சிக்கல். தமிழனின் உணர்வை உரசினால் இந்த நிலைதான் ஏற்படும் என்பதை öŒõல்வதற்காக இந்தத் @தர்தலை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இனஉணர்வுள்ள தமிழர்க@ள, மான உணர்வுள்ள தமிழர்க@ள இந்த ஒருமுறை மட்டும் காங்கிர”க்கு வாக்களிக்காதீர்கள். கடந்த @தர்தல்களில் கட்சிக்காக வாக்களித்தீர்கள். Œõதிக்காக வாக்களித்தீர்கள். மதத்திற்காக வாக்களித்தீர்கள். இந்த ஒருமுறையாவது கட்சி, Œõதி, மதம், பணம் இவையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு கை சின்னத்திற்கு வாக்களிக்காமல் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள்” என்று @வண்டு@காள் விடுத்தார். “@பாற்றுதலுக்குரிய மருத்துவர் இராமதா”, அண்ணன் வை@கா, அருமைச் Œ@காதரர் திருமாவளன், பொதுவுடமைக் கட்சிகளை @Œர்ந்த தா. பாண்டியன், நல்லக்கண்ணு, து. இராŒõ, இவர்களெல்லாம் தமிழீழம் ஒன்றுதான் தீர்வு என்று öŒõல்கிறார்கள். தமிழர்களின் வாழ்வு நல்லபடியாக அமைய @வண்டுமானால் தமிழீழம் ஒன்றுதான் தீர்வு ஒன்றுதான் என்று பெருமகள் ஜெயலலிதாவும் கூறியிருக்கிறார். அந்தச் öŒõல்லுக்காகத்தான் நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பரப்புரை öŒ#@தாம். தமிழ் ஈழத்திற்கு எதிராக ஜெயலலிதா இருக்கும்@பாது அவரை விமர்சித்து முழங்கியவன் இந்த சீமான். @தர்தலுக்காக தமிழீழம் பற்றி @ப”ம் ஜெயலலிதா @தர்தலுக்குப் @பŒ மாட்டார் என்று கூறுகிறார்கள். @பŒட்டும், @பŒமால் கூட @பாகட்டும் அவர்கள் @தர்தலுக்காகவாவது தமிழீழம் அமையும் என்று öŒõன்னார்கள். ஆனால், நீங்கள் @தர்தலுக்காகவாவது ஈழம் பற்றி @பŒவில்லை@ய. தமிழினத்தின் முன் பொ# öŒõல்லிவிட்டு யாரும் தப்பிக்க முடியாது. @வறொரு முறை வந்தால் அந்த மக்களை நாடி வந்தால் முன்பு öŒõல்லிவிட்டு öŒ#யாததை @கள்வி @கட்பார்கள், அதற்காக தண்டிப்பார்கள்” என்று கூறினார். “ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் ஈழத்தை பெற்றுத்தரக்கூட @தவையில்லை. 35 ஆயிரத்திற்கும் @மற்பட்ட மாவீரர்கள் களமாடி அங்கு புதைந்து@பானார்கள். நெஞ்சில் உரம்முள்ள மறத்தமிழர் பிரபாகரன் கட்டிய எழுப்பிய @தசிய @பார்ப்படை மூலம் இழந்த தமிழீழ மண்ணை மீட்டெடுப்பார்கள். அதற்கு தடையாக இருப்பது ஒன்@ற ஒன்று மட்டும்தான் புலிகள் மீதான தடை. புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கிவிட்டால் உலகமெல்லாம் நீக்கிவிடும். ஈழத் தமிழர்களுக்கு நீங்கள் அரிசி தர@வண்டாம், பருப்பு தர@வண்டாம், மண்ணெண்ணெ# தர@வண்டாம். ஒன்@ற ஒன்றை மட்டும் öŒ#யுங்கள், புலிகள் மீதான தடையை நீக்குங்கள். அவர்க@ள ஈழத்தை வென்றெடுப்பார்கள். தமிழினம் கொடுமைக்கு உள்ளாகும்@பாது பிறந்த உண்மையாக இருக்க@வ @பாராடி வருகி@றன். தமிழர்க@ள நீங்களும் தமிழினத்திற்கு இந்தத் @தர்தலில் உண்மையாக இருந்து வாக்களியுங்கள். தமிழனின் மான உணர்வு öŒத்துப்@பா#விடவில்லை என்பதைக் காட்ட கை சின்னத்தில் வாக்களிக்காதீர்கள். மாம்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று இயக்குநர் சீமான் வலியுறுத்தினார். “காங்கிர”க்கு வாக்களிக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக öŒ#யப்படும் பரப்புரை மட்டுமல்ல இந்தக் கூட்டம், தமிழனின் உள்ள உணர்ச்சிகளை எழுப்புவதற்கான பரப்புரை கூட்டம் இது. ஒரு காக்கையின் மீது கல்லெறிந்தால் நூறு காக்கைகள் கத்துகின்றன. ஒரு நாயின் கல்லெறிந்தால் அந்தப் பகுதிகளும் அத்தனை நா#களும் குரைக்கின்றன. வரிப்புலிகள் காக்கப்பட @வண்டும், கரடி இனம் அழிகின்றன அவை காக்கப்பட @வண்டும், வனவிலங்குகள் அழிக்கின்றன அவை காக்கப்பட @வண்டும் என்று கூறி காப்பகங்களை அமைத்து விலங்குகளை காக்கின்றனர். ஆனால், ஈழத்தில் Œக மனிதன் Œõகிறான். அதைத் தடுக்க உலகத்தில் உள்ள யாரும் முன்வரவில்லை” என்று ”ட்டிக்காட்டினார். “இலங்கையில் தெருக்கள் @தாறும் புத்தர் சிலைகள் சிரிக்கின்றன. அவற்றின் காலடியில் தமிழர்களின் பிணங்கள் கிடக்கின்றன. அங்@க தமிழனின் குருதி தெருக்களில் ஓடுகிறது. கறிக்கடை பக்கம் நாம் @பாகும்@பாது குருதி வாடை வீ”கிறது என ஒதுங்கிச் öŒல்கி@றாம். ஆனால், அங்@க தமிழினம் உள்ள @தŒத்தில் குருதி வாடை வீ”கிறது. இந்தச் ‹ழ்நிலையில்தான் அங்குள்ள தமிழர்கள் பாதுகாப்பாக வாழ விரும்புகிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது. என் பாட்டன், அப்பன் வாழ்ந்த பூமியை அயலவன் அபகரிக்கக்கூடாது. என் தாயின் மடியில் மாற்றான் தலைவைத்துப் படுக்கக்கூடாது என்ற எண்ணத்தில் அதை தடுப்பதற்காகத்தான் தமிழ் இளைஞர்கள் ஆ#தம் ஏந்தி @பாராடி வருகிறார்கள். இதனை பயங்கரவாதம் என்று எப்படி öŒõல்வது” என்றும் சிமான் கூறினார். “பிரபாகரன் ஆ#தம் ஏந்தி @பாராடுகிறான். விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்று கூறுகிறீர்க@ள? அவர்கள் எப்@பாது ஆ#தம் ஏந்தினார்கள். நான் இறந்தால் என் கண்கள் அப்படி@ய வைத்துப் புதைக்காதீர்கள். பார்வையற்ற யாருக்காவது அதனை பொருத்துங்கள். தமிழீழம் மலருவதை என் கண்களால் பார்க்கி@றன் என்று öŒõன்னான் குட்டி மணி. ஆத்திரமடைந்த சிங்களவன், குட்டிமணியின் கண்களை பிடுங்கி தனது பூட்”காலால் மிதித்தான் சிங்களன். இங்கு தமிழ்ப் பெண்களின் மார்புகள் கிடைக்கும் என்று எழுதி வைத்தவன்தான் சிங்களன். தமிழ் பெண்களின் மார்புகளில் ஸ்ரீ என்ற சிங்கள எழுத்தை எழுதினான் சிங்களவன். இவற்றையும் கண்ட பிறகுதான் எந்த ஆ#தத்தை வைத்துக் கொண்டு தமிழ் இனத்தை வன்கொடுமை சிங்களவர்கள் öŒ#கிறார்க@ள, அ@த ஆ#தத்தை வைத்து எம்மக்களை காக்கப் @பாகி@றன் என்ற வைராக்கியத்தில் ஆ#தம் ஏந்தி தமிழீழ @தசியப் @பார்ப்படையை உருவாக்கினான் பிரபாகரன். இப்@பாது எண்ணிப் பாருங்கள் பிரபாகரன் எந்த நிலையில் ஆ#தம் ஏந்தினான். இந்த உண்மையைச் öŒõன்னால் அதை பொறுத்துக் கொள்ளாத நீங்கள் எங்களை சிறையில் அடைக்கிறீர்கள். இது எந்த வகையில் நியாயம்?” என்று கூறினார். தொடர்ந்து @பசிய அவர், “இலங்கை இறையாண்மை மிக்க நாடு என்று கூறும் தலைவர்க@ள, ஈராக்கில் மக்கள் öŒத்த@பாது சிந்தை கலங்கி கதறியழு@தாம். பாலஸ்தீனத்தில் குண்டு விழும்@பாது கதறியழு@தாம். இ@த@பாலத்தான் பக்கத்து ஈழத்தில் Œக மனிதன் Œõவதை எண்ணி அழுகி@றாம். அதனை மக்களுக்கு தெரியப்படுத்த பரப்புரை öŒ#து வருகி@றாம். இதில் என்ன தவறு இருக்கிறது. பாலஸ்தீனத்தில் குண்டு விழும்@பாது பதறித் துடிக்கும் நீங்கள், பக்கத்து ஈழத்தில் குண்டு விழுந்து துடிக்கும் தமிழனுக்கு ஆதரவாக @கட்காதது ஏன்?” என்று @கட்டார். “ஈழத்தில் பிறந்த தமிழினம் öŒ#த பாவம் என்ன? அவர்கள் இத்தனை கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். ஆயிரம் ரூபா# கொடுத்தால்தான் 100 கிராம் சீனி கிடைக்கும். இப்படிப்பட்ட பொருளாதாரத் தடை ஏன்? அங்கு வாழும் ஒரு தலைமுறை மின்Œõரத்தை காணாமல் வாழ்கிற@த ஏன்? இது இங்குள்ள தலைவர்களுக்குத் தெரியாதா? இலங்கை இறையாண்மை உள்ள நாடு அது ஒரு தனி @தŒம். அங்கு நடப்பது பற்றி நான் @பŒமுடியாது என்று கூறும் தலைவர்களை அப்புறம் அங்கு அமைதிப்படையை எப்படி அனுப்பினீர்கள்” என்றும் சீமான் வினா எழுப்பினார். “தமிழினத்திற்கு எதிராக எவன் @பசினாலும், எவன் öŒயல்பட்டாலும் கதி இதுதான் என்பதை öŒõல்வதற்காக தமிழர்க@ள இந்தத் @தர்தலை பயன்படுத்திக் கொள்ளுங்கள். புலிகளை அழித்தொழித்துவிட்டு தமிழர்களுக்கு அரசியல் தீர்வு தருவதாக இராŒபக்@Œ öŒõல்கிறான். பாதுகாப்பு வலையப் பகுதிக்கு வந்த தமிழ் மக்களுக்குச் @Œõறு கொடுத்தானா அவன். பாதுகாப்பு வலையப் பகுதிக்கு öŒல்ல அனுமதியுங்கள் என்று öŒõல்பவர்க@ள, அங்குச் öŒல்பவர்களின் கதி என்ன? பரி@Œõதனை என்ற பெயரில் அங்@க உறவுகளுக்கு மத்தியி@ல பெண்கள் நிர்வாணமாக நிறுத்தப்படுகிறார்கள். அந்த இடமா அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும். அந்த மண்ணில் தமிழர்களுக்கு உடுத்த மாற்று உடையில்லை. பட்டகாயத்திற்கு @பாட மருந்து இல்லை. பாதுகாப்பு வலையப்பகுதிக்கு வந்தவர்களுக்கு சிங்களவன் என்ன öŒ#து கொடுத்தான். அவன் öŒ#தது ஒன்@ற ஒன்றுமட்டும்தான். உறவுகளை சிதைத்து தனி சிறை வைக்கிறான். அப்படிப்பட்ட ‹ழலில் ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழர்களுக்கு Œமஉரிமை பெற்றுத் தரப்படும் என்று öŒõல்பவர்க@ள, @பாரை நிறுத்த முடியாத நீங்கள் தமிழர்களுக்கு Œமஉரிமை எப்படி பெற்றுத் தருவீர்கள்?” என்று @கட்டார். “காவிரி ஆற்று தண்ணீர், முல்லை ஆற்றுத் தண்ணீர் அண்டை மாநிலங்களிலிருந்து பெற்றுத் தராத நீங்கள், மீனவர்களின் Œõவை தடுக்காத நீங்கள், ஈழத்தில் தமிழர்களுக்கு Œமஉரிமை பெற்றுத் தரு@வன் என்று கூறுவதை எப்படி நாங்கள் நம்புவது?. 60 ஆண்டுகளாக பல கொடுமைகளை அனுபவித்து வந்த தமிழர்கள், சிங்களவ@னாடு Œ@காதரனாக ஒன்றாக இரு என்று கூறுவது எப்படி Œõத்தியம். ஈழத்தில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வதா? அல்லது தனி நாட்டில் வாழ்வதா? என்பதை தீர்மானிக்க அந்த மண்ணில் பிறந்த தமிழனுக்கு மட்டும்தான் உரிமை உண்டு. மாறாக உலகத்தில் பிறந்த எந்வொரு கொம்பனுக்கும் இல்லை” என்று சீமான் கூறினார். “மக்களை கொல்பவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி பயங்கரவாதம் ஆகும். அப்பாவி தமிழர்கள் மீது சிங்கள @பார்ப்படை குண்டுகளை வீசிக் கொல்வதை அரŒ பயங்கரவாதம் என்று உலகம் பார்க்காதது ஏன்? öŒன்னைக்கு வந்த பிரதமர் öŒõன்னார், ‘எல்லா நாடுகளிலுமிருந்து வந்து இந்தியாவில் ஆ#தப் பயிற்சி பெறுகிறார்கள்’ என்றார். அப்படி என்றால், பாகிஸ்தானிலிருந்தும், சீனாவிலிருந்தும் இந்தியாவிற்கு வந்து பயிற்சி பெறுகிறார்களா? இலங்கை @பார்ப்படைக்கு ஆ#தம் வழங்கியது பற்றி @கட்டால், ‘பாதுகாப்புக்காக ஆ#தம் வழங்கியதாக’ச் öŒõல்கிறார். யாருடைய பாதுகாப்புக்காக ஆ#தம் வழங்கியிருக்கிறீர்கள். தமிழர்களிடமிருந்து தம்மை காத்துக் கொள்ள சிங்களவர்களுக்கு ஆ#தம் வழங்கினீர்களா?” என்று @கட்டார். “ஈழ மண்ணில் நடக்கும் அத்தனை கொடுமைகளுக்கும் முழு முதற் காரணம் காங்கிர” கட்சிதான். ஆ#தம் தரவில்லை என்று சிதம்பரம் உள்ளிட்ட பலர் கூறுகிறார்கள். தமிழினத்திற்கு எதிரான @பாரில் நாங்கள் வெற்றி பெற்றதற்கு ஆ#த உதவி வழங்கிய இந்தியாவிற்கு நன்றி öŒõன்ன பொன்@Œகா @பச்”க்கு இங்குள்ளவர்கள் மறுப்பு öŒõல்லவில்லை@ய ஏன்? கொஞ்Œம்கூட மனŒõட்சி இல்லாமல், வெட்மில்லாமல் @பாரை நிறுத்திவிட்@டாம் என்று @Œõனியா @ப”கிறார். இந்த @தŒத்தில் பிறந்த எனக்கு இந்த @தŒம் öŒ#யும் தவறையும் ”ட்டிக்காட்ட உரிமையுண்டு. நாங்கள் öŒõன்னால் பயந்து@பா# சிறை வைக்கிறீர்கள்” என்றும் இயக்குநர் சீமான் கூறினார்.

மே 11, 2009 at 4:34 பிப 2 பின்னூட்டங்கள்

நிபந்தனை ஜாமீனில் சீமான் விடுதலை!

seeman

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக புதுச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்த இயக்குநர் சீமான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நெல்லை போலீசார் அவரைக் கைது செய்ததை சென்னை உயர்நீதிமன்றமும் சமீபத்தில் ரத்து செய்தது நினைவிருக்கும்.

இதைத் தொடர்ந்து, நீதிமன்ற நடைமுறைகள் முடிந்த பிறகு நாளை அல்லது நாளை மறுநாள் காலை சீமான் விடுதலையாகி வெளியில் வருகிறார்.

முன்னதாக புதுச்சேரி வழக்கில் ஜாமீன் கேட்டு புதுச்சேரி மாவட்ட தலைமை நீதிபதி கிருஷ்ணாராஜாவிடம் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார் இயக்குநர் சீமான்.

நேற்று அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கிருஷ்ணாராஜா, ரூ.10 ஆயிரத்திற்கு 2 பேர் சொத்து ஜாமீன் கொடுக்க வேண்டும் என்றும், வெளியில் சென்று சாட்சிகளைக் கலைக்கவோ, அச்சுறுத்துவோ கூடாது என்றும் சீமானுக்கு உத்தரவிட்டார்.

ஏப்ரல் 25, 2009 at 11:55 முப 3 பின்னூட்டங்கள்

Older Posts


வீரவணக்கம் தியாகிகளே

பார்வைகள்

  • 53,118 பார்வைகள்

RSS திருமா